
மார்ச் 11, ராயகடா (Odisha News): ஒடிசா மாநிலம், ராயகடா-மல்கன்கிரி (Rayagada-Malkangiri) வழியாக கோராபுட் பாதையில், நேற்று (மார்ச் 10) சிகர்பாய் மற்றும் பாலுமாஸ்கா நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையைக் கடக்கும்போது, கனிபாய் அருகே ஒரு சரக்கு ரயில், ஆம்புலன்ஸ் மீது மோதியது. அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், ஆம்புலன்சில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. Gulfam Singh Yadav: பாஜக பிரமுகர் 3 பேர் கும்பலால் ஊசி செலுத்தி கொடூர கொலை; உபி-யில் பரபரப்பு.!
ஆம்புலன்ஸ் மீது சரக்கு ரயில் மோதி விபத்து:
இதுகுறித்த விசாரணையில், கண் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ், கல்யாண்சிங்பூர் தொகுதியின் சிகர்பாய் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கனிபாய், கஞ்சம் ஜோடி, ஜகுடு, பெட்டாலாங் மற்றும் சக்ரகலாங் ஆகிய கிராமங்களிலிருந்து கண் அறுவை சிகிச்சைக்காக திட்டமிடப்பட்ட 8 நோயாளிகளை ஏற்றிச் சென்றுள்ளனர். கனிப்பாய் அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்றபோது, அந்த வாகனம் சரக்கு ரயிலில் மோதியது. இந்த மோதலின் காரணமாக, ரயில் ஆம்புலன்ஸை கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. அதற்குள் லோகோ பைலட் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார். இதனால் ஆம்புலன்சு நிறுத்தப்பட்டது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.