Workout (Photo Credit: Pixabay)

மார்ச் 10, சென்னை (Health Tips): ஒவ்வொரு நாளும் நமது உடல் நலனை மேம்படுத்த, உடற்பயிற்சி செய்வது அவசியமான ஒன்றாகும். உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள், பலவிதமான முயற்சிகளை செய்து வருகின்றனர். சாதரண நடைப்பயிற்சி கூட உடல் நலனை மேம்படுத்த உதவிடும். எளிமையான உடல் செயல்பாடுகள், உடலை சிறந்த முறையில் நிர்வகிக்க வழிவகை செய்கிறது. உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பெறுகிறது. பலரும் உடற்பயிற்சி விஷயத்தில் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வது நல்லதா? சாப்பிடும் முன்பு உடற்பயிற்சி செய்வது நல்லகா? என குழப்பம் இருக்கும். அதேபோல, நடைபயிற்சியிலும் இதே சந்தேகம் நீடிக்கிறது. இரண்டு விஷயத்திலும் மாறுபட்ட கருத்து, பரிந்துரை இருக்கின்றன. இந்த பதிவில் அதுதொடர்பான விஷயங்களை விரிவாக காணலாம்.

உணவு எடுத்துக்கொள்ளும் முன் நடைப்பயிற்சி:

நாம் காலை உணவு சாப்பிடும் முன்பு, வெறுமையான வயிற்றில் நடந்தால் பல நன்மைகள் கிடைக்கும். உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்படும். வளர்சிதை மாற்றம் துரிதப்பட்டு, டூப்களின் எடை இழப்புக்கு வழிவகை செய்யும். மனதின் தெளிவுத்தன்மையை உண்டாக்கும். Heart Attack Symptoms: மாரடைப்பு வருவதற்கு முன்பு தென்படும் அறிகுறிகள்..! தவிர்க்கும் வழிமுறைகள் என்ன..? 

உணவு எடுத்துக்கொண்ட பின் நடைப்பயிற்சி:

உணவு சாப்பிட்ட பின்னர் நடைப்பயிற்சி செய்வது, செரிமான பாதையினை உணவை விரைந்து அனுப்பும். உணவு செரிக்கும் செயல்முறை வேகமாகும். இது நேரடியாக செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். உணவு சாப்பிட்ட பின்னர் நடைப்பயிற்சி செல்வது, இரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த உதவி செய்யும். உடலில் கொழுப்பு சேரும் விஷயமும் குறையும். உணவில் கிடைக்கும் கலோரியை எரிக்க நடைப்பயிற்சி சாப்பிட்ட பின் நல்லது.

இரண்டில் சிறந்தது?

மேற்கூறிய இரண்டு நடைமுறைகளும் சிறந்த நடைப்பயிற்சியில் தான். இரண்டும் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். ஆனால், உடலின் அதிக கொழுப்பை கரைக்க நினைப்போர், வெறுமையான வயிற்றில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதே சிறந்தது ஆகும். செரிமானம் தொடர்பான பிரச்சனை உடையோர், சாப்பிட்ட பின்னர் நடைப்பயிற்சி செய்யலாம். இரத்த சர்க்கரை அளவினை பராமரிக்க உதவும். இதுதொடர்பான மேற்படி சந்தேகம் இருப்போர், ஊட்டச்சத்து நிபுணரையும் கலந்தாலோசித்து அதற்கேற்ப செயல்படலாம்.