Father Blesses Bride: மகளிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வண்ணத்துப்பூச்சியாய் வந்த தந்தை; மணக்கோலத்தில் கலங்கிய மணமகள்.!
தனது அன்பு மகளிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, மகளின் திருமண நாளில் வண்ணத்துப்பூச்சி தோற்றத்தில் மணப்பெண்ணை நோக்கி சென்று ஆசிர்வதித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
மார்ச் 08, சென்னை (Trending News): திருமணம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் மறக்க இயலாத ஒன்று. குழந்தையாக பிறந்து, பருவ வயதை எட்டியபின், பல பொறுப்புகளுடன் மனிதன் எதிர்கால வாழ்க்கையில் நீண்ட பயணத்திற்கான துணையை தேர்வு செய்யும் மகிழ்ச்சியில் இருக்கும் தம்பதிகள், பல கனவுடன் திருமண மேடையில் இருப்பார்கள். சிலருக்கு அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், காலசக்கரத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட நிலையும் இருக்கும். அவ்வாறாக ஒரு தந்தை மகளுக்கு அளித்த வாக்குறுதியின் பேரில், வண்ணத்துப்பூசியாக வருகை தந்ததாக குறிப்பிடப்படும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மணமகளும் தனது நினைவுகளை எண்ணி கண்கலங்கிப்போனார். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்ற விபரம் குறித்து விசாரிக்கப்படுகிறது. இரயில் பயணத்தில் அதிர்ச்சி.. பெண்ணை 30 நிமிடம் ஆபாசமாக வீடியோ எடுத்த ஆசாமி.. அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவி.!
மகளின் திருமண நிகழ்ச்சிக்கு வண்ணத்துப்பூச்சியாய் வந்து ஆசிர்வதித்த தந்தை:
The bride's father died years ago.
He had promised to come to her wedding,
and his presence was in the form of a butterfly ... pic.twitter.com/CBjWO7sCJl
— The Figen (@TheFigen_) March 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2025 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

