ஜனவரி 03, சிட்னி (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி (AUS Vs IND 5th Test, Day 1) மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் (Sydney) இன்று (ஜனவரி 03) தொடங்கியது. இப்போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக சுப்மன் கில், பிரஷீத் கிருஷ்ணா சேர்க்கப்பட்டனர். கேப்டன் பும்ரா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். Khel Ratna: உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு..! விபரம் இதோ.!
இந்தியா மீண்டும் சொதப்பல்:
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 10 ரன், கேஎல் ராகுல் 4 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த கில் 20, கோலி 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இந்நிலையில், ஜோடி சேர்ந்த பண்ட்-ஜடேஜா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர், அப்போது, பண்ட் (Rishabh Pant) 40 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். பின், சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.
முதல் நாள் ஆட்டம் முடிவு:
இறுதியில், இந்தியா 72.2 ஓவர்கள் விளையாடி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் (Scott Boland) 4, ஸ்டார்க் 3, கம்மின்ஸ் 2, லயன் 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதல் நாள் முடிவில் 3 ஓவர்களில் 9 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. உஸ்மான் கவாஜா 2 ரன்னில் அவுட்டானார். நாளை காலை 5 மணிக்கு 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கும்.