Child Death in Vikravandi School (Photo Credit: @Newstamil24X7 X)

ஜனவரி 04, விக்கிரவாண்டி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி (Vikravandi) பகுதியில் வசித்து வருபவர் பழனிவேல். இவரின் மனைவி சிவசங்கரி. தம்பதிகளுக்கு 4 வயதுடைய சிறுமி லியா லட்சுமி என்ற மகள் இருக்கிறார். இவர் விக்கிரவாண்டியில் (Vikravandi Child Death) உள்ள செயின்ட் மேரி தனியார் பள்ளியில் பயின்று யுகேஜி பயின்று வந்தார். இதனிடையே, நேற்று மாலை சிறுமி பள்ளி வளாகத்தில் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிறுமி சிறுநீர் கழிக்க தனியாக சென்றதால், அவர் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்ததாகவும் தெரியவருகிறது. அவரை நீண்ட நேரம் கழித்தே பள்ளி நிர்வாகம் தேடியதாக உறவினர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து மரணம்:

குழந்தையின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததால் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். Virudhunagar: பட்டாசு ஆலை வெடித்துச்சிதறி சோகம்; 6 பேர் பரிதாப பலி.. சாத்தூரில் சோகம்.!

பிரேத பரிசோதனை நிறைவு:

சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட காரணத்தால், உறவினர்களின் கோரிக்கையை ஏற்று கேமிரா முன்பு பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, குழந்தையின் உடல் அவரின் சொந்த ஊருக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சிறுமியின் உடலை கண்ட பெற்றோர், உறவினர் கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை கைது:

மேலும், இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் எமிலிடா, தலைமை ஆசிரியர் டொமினிக் மேரி, வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சிறையில் அடைக்கவும் காவல்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு கிடைத்ததும் சிறுமி பலியானதற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதல்வர் இரங்கல் & இழப்பீடு அறிவிப்பு:

குழந்தையின் உடல் சொந்த ஊருக்கு வந்ததும், சிறுமி லியாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறியழுதபடி இருந்தனர். பள்ளிக்கு சீருடையில் போன உன்னை இப்படியா பார்க்கணும்? என உறவினர்கள் கண்ணீருடன் கலங்கி இருந்தனர். தமிழ்நாடு அரசில் சார்பில் சிறுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் (MK Stalin), ரூ.3 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

முன்னெச்சரிக்கை & பாதுகாப்பு கருதி பள்ளி வளாகம், சிறுமியின் வீட்டில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை கலங்கிய காட்சிகள்:

சிறுமியின் தாய் வேதனையுடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்: