Manipur Violence (Photo Credit: @SaffronSunanda X)

ஜனவரி 04, சுராசந்த்பூர் (Manipur News): மணிப்பூர் (Manipur) மாநிலத்தில் கடந்தாண்டு மே மாதம் 03ஆம் தேதி ஏற்பட்ட இனக்கலவரத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, அமைதி நிலவினாலும் அவ்வப்போது கலவரங்கள் நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் இனக்கலவரங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். Pregnant Woman: வயிற்று வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்.. பேருந்தை நிறுத்தி உதவி செய்த சக பெண் பயணிகள்.., வீடியோ உள்ளே..!

பழங்குடியினர் மோதல்:

இந்நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மணிப்பூரின் காங்போங்பி மாவட்டத்தில் உள்ள சைபோல் கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும், குக்கி - சோ பழங்குடியினத்தை (Kuki-Zo Tribals) சேர்ந்த பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சில பெண்கள் தலையில் அடிபட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து குக்கி - சோ பழங்குடியினர் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வேலைநிறுத்தப் போராட்டம்:

அதன்படி, குக்கி - சோ பழங்குடி மக்கள் வசிக்கும் காங்போங்பி, தெங்னவுபால் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் நேற்று முன்தினம் (ஜனவரி 02) நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்கள் வழியே வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இது பெரும் கலவரத்துக்கு வழிவகுத்தது.

மணிப்பூர் கலவர வீடியோ இதோ: