Yelagiri Tour (Photo Credit: LatestLY)

ஜனவரி 03, ஏலகிரி (Travel Tips): குளிர்காலங்களில் சென்னையிலிருந்து ஒரு நாள் அல்லது இரு நாள் பயணமாக இயற்கை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல வேண்டும் என்றவுடன் நினைவுக்கு வரும் இடம் ஏலகிரி. அதிலும் தற்போதைய பருவகாலநிலைக்கு மற்ற மலைப்பிரதேசங்களில் பனி நிறைந்திருக்கும். வேலூர் மாவட்டத்திலுள்ள ஏலகிரியில் அக்டோபர் முதல் மார்ச் வரை சுற்றிப் பார்க்க ஏற்ற காலமாக உள்ளது. பயண நேரம் சென்னையிலிருந்து 4 முதல் 5 மணிவரை ஆகும். தங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப பேருந்து, இரயில் அல்லது சொந்த வாகனத்திலும் செல்லலாம். ஏலகிரி மலை ஏற செல்வதற்கு முன்பே அங்கு கிடைக்கும் வாடகை பைக் எடுத்துக் கொண்டு ஊசி வளைவுகளில் பைக் ரைடு செல்லலாம்.

புங்கனூர் ஏரி மற்றும் இயற்கை பூங்கா:

ஏலகிரி மலைகளுக்கு நடுவில் இந்த ஏரி செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் படகு சவாரியும் செய்யலாம். இந்த ஏரின் அருகில் அழகிய இயற்கையோடு அமைந்த பூங்காவும் உள்ளது. இதில் குழந்தைகளுக்கான தண்ணீர் மற்றும் தரை விளையாட்டுகளும் மற்றும் வெளிநாட்டு முயல், பூனை, எலி, நாய் போன்ற விலங்குகளும் வெளிநாட்டு பறவைகளும் உள்ளன. செயற்கை அருவியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது குழந்தைகளுக்கு பிடித்த இடமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. Rava Semiya Paniyaram Recipe: வீட்டில் ரவா, சேமியா இருக்கா? அப்போ இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

அரசு மூலிகைப் பூங்கா:

சுற்றுலாப் பயணிகளை தற்போது அதிக அளவில் ஈர்க்கிறது அரசு பாராமரித்து வரும் இந்த மூலிகைத் தோட்டம். இதில் சித்தா, ஆயுர்வேதத்திற்கு பயன்படுத்தப்படும் மூலிகைகள் வளர்க்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காடுகளில் வளரும் அரிய வகை மூலிகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மூலிகை செடிகள் மீது ஆர்வமுடையவர்களுக்கும், மாடித் தோட்டத்தில் ஈடுபாடுடையவர்களுக்கும் இது பிடித்த இடமாகும். இங்கு பல அரிய செடிகளை வீட்டிற்கும் வாங்கிச் செல்லலாம்.

ஏலகிரி சாகச முகாம் பூங்கா:

இந்த பார்க்கில் இளைஞர்களுக்கு பிடித்த பல சாகச விளையாட்டுகள் உள்ளன. Bungy Jumping, ஜெயிண்ட் ஸ்விங், ஸிப் டிரைவ் மற்றும் உயரமாக அமைக்கப்பட்ட பாதைகளை கடந்து செல்லும் திரில் விளையாட்டுகள் இளைஞர்களுக்கு சுவாரசிய அனுபவத்தை அளிக்கிறது. குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் இந்த பூங்காவில் உள்ளது. அச்சமூட்டும் விளையாட்டுகள் விளையாட ஆசைப்படுவோர் கட்டாயம் இந்த பூங்காவிற்கு செல்லலாம்.

சுவாமி மலை:

ஏலகிரியில் உள்ள மங்கலம் என்னும் கிராமத்தில் தொடங்குகிறது சுவாமிமலை மலையேற்றம் பயணம். 1 முதல் 2 மணிநேர மலையேற்றப்பின் முழு ஏலகிரியின் வியூவை ரசிக்கலாம். மலையேற மிதமான வழித்தடம், கடினமான வழித்தடம் என நம் தேர்வுக்கு ஏற்ப நுழைவுக்கட்டணம் உண்டு. இளைஞர்களுக்கு ஏற்ற இடமாகும். சூரிய உதயம் அல்லது மறைவை மலை உச்சியிலிருந்து பார்த்து ரசிக்கலாம். மலையேற்ற பாதை சற்று கடினமாக இருக்கும் என்பதால் வயதானவர்களுடன் ஏலகிரி செல்பவர்கள் இந்த இடத்தை தவிர்க்கலாம். International Mind Body Wellness Day 2025: சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம்.. உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இத பண்ணுங்க.!

ஜலகம்பாறை அருவி:

திருப்பத்தூரில் அருகே சடையனூர் என்னுமிடத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. அருவியில் குளிக்க, ஆண் பெண் என இருவருக்கும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. எளிமையான மலையேற்றம் செய்ய விரும்புவோர் நிலவூர் ஏரிப்பூங்கா வழியாக சென்று ஜலகம்பாறையை அடையலாம். இது மலையடிவாரத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நண்பர்களுடன் செல்ல ஏற்றபாதையாகும். ஆனால் இது உள்ளூர்வாசிகள் மட்டுமே பயன்படுத்துவதால் கூடுதல் கவனம் தேவை.

மேலும் ஏலகிரியிலுள்ள நிலவூர் ஏரி மற்றும் பார்க், அமிர்தி விலங்கியல் அருவி, வேலவன் கோவில், ஏலகிரி முருகன் கோவில்,மற்றும் மலை நடுவில் அமைந்துள்ள ரெசாட்கள், இரவு முகாம்கள் உங்கள் ஏலகிரி பயணத்தை மறக்க முடியாததாக மாற்றும்.