ஜனவரி 03, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 88 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் தீபக், ஜாக்குலின், மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்:
இறுதிக்கட்டத்தை நோக்கி ஆட்டம் நகருவதால், போட்டியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தங்களின் இலக்கை நோக்கி பயணித்து வருகின்றனர். தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், வைல்ட் கார்டில் வந்த மஞ்சரி ஆகியோர் இறுதிப்பயணத்தில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ராயன், ஜாக்குலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Game Changer Trailer: சங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் பிரம்மாண்ட ட்ரைலர் வெளியீடு; மாஸ் காட்டும் ராம் சரண்.. வீடியோ உள்ளே.!
டிக்கெட் டு பினாலே:
இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டிக்கெட் டு பினாலே டாஸ்கில் மொத்தம் 10 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெறும் அந்த ஒரு போட்டியாளர் நேரடியாக பைனலுக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார். மொத்தம் 5 நாட்கள் இந்த டாஸ்க் நடத்தப்பட்டது. இதனிடையே இன்று வெளியான புரோமோவில், விஷால், பவித்ரா, ஜாக்குலின் மற்றும் அருண் பிரசாத் ஆகிய நால்வரின் பாயிண்டுகள் 0 புள்ளிகளுக்கு சென்றனர். அவர்களின் புள்ளிகள் அனைத்தும் மற்ற போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர். இதனால் டிக்கெட் டூ பினாலே டாஸ்குகளின் முடிவில் ரயான் 21 புள்ளிகளுடன் வெற்றிபெற்று இருக்கிறார். இதன்மூலம் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்திருக்கிறார் ரயான். ஒருவேளை இந்த வாரம் நடைபெறும் எவிக்ஷனில் ரயான் எலிமினேட் ஆனால், அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள முத்துக்குமரனுக்கு டிக்கெட் டூ பினாலே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.