ஜனவரி 03, புதுடெல்லி (New Delhi): ஆயிரம் இரவுகள் வாழ்க்கையில் வந்தாலும், இதுதானே அவர்களுக்கு முதலிரவு! ஒரு பக்கம் எதிர்ப்பார்ப்புகளும் உள்ளக் கிளர்ச்சியும், மறுபக்கம் அச்சமும் படபடப்பும். முதலிரவுக்கு முன்பாக பெரும்பாலான புதுமணத் தம்பதிகளின் நிலை இதுதான்.
உங்களின் எல்லா மனத்தடைகளையும், அச்சங்களையும் ஒரே நாளில் விட்டுவிட முடியாதுதான். ஆனால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்கும் செயலைத் தொடங்க சிறந்த நேரம் முதலிரவு. இது உடலுறவுக்கான இரவு மட்டுமல்ல, மனம்விட்டுப் பேசுவதற்கான இரவும்தான். திருமண நாள் நிகழ்வுகளை, அன்று நடந்த கலாட்டாக்களை, நகைச்சுவை தருணங்களை, சுவையான அம்சங்களை, ஏன் எரிச்சலூட்டிய சம்பவங்களையும் கூட இருவரும் பகிர்ந்துகொள்ளலாம்., சிரித்து மகிழலாம். இனி வரப்போகும் ஆயிரமாயிரம் இன்பமான இரவுகளுக்கு இந்த முதலிரவு அச்சாரமாக இருக்கட்டும். தேவையற்ற அச்சங்கள் அகன்று, பரஸ்பரம் புரிதலும், அன்பும் காதலும் மேலோங்கியிருக்கும் உறவில் ஒவ்வொரு இரவும் முதலிரவே! International Mind Body Wellness Day 2025: சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம்.. உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இத பண்ணுங்க.!
இப்படியெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்:
ஆபாசப் படங்கள், பார்ன் வீடியோக்கள் போன்றவற்றை பார்த்து, நீங்களாகவே கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். உண்மையான உறவு, வெறும் உடல் தொடர்பானது மட்டுமல்ல. அது இருவரின் உணர்வுகளுடன் பிணைந்தது. ஆண்கள் இதை, அவர்களின் ஆண்மையை நிரூபித்துக் காட்டும் போட்டி மைதானமாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. முதலிரவிலேயே எல்லாவற்றையும் நிரூபித்து ஆகவேண்டியதில்லை. மேலும், தம்பதியினர் திருமணத்துக்கு முன்பு ஒருவருக்கொருவர் பழக்கமில்லாதவராக இருந்தால், இருவருக்குமே உடலளவிலும், மனத்தளவிலும் நெருக்கமாக கொஞ்ச காலம் பிடிக்கும். அதன் பிறகு, உடலுறவில் உங்கள் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.
முதலிரவு என்பது தாம்பத்ய வாழ்க்கையின் ஆரம்பம் தான். முதல் இரவிலேயே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. கணவன் - மனைவி இருவரும் வெளிப்படையாக இருங்கள்.