Chennai Air Quality Index on 04 January 2025 (Photo Credit: www.aqi.in)

ஜனவரி 04, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இதனால் சில இடங்களில் மிதமான மழை பெய்தாலும், பருவமழை நிறைவையொட்டி குளிர்காலம் தொடங்கி இருக்கிறது. இதனால் காலை நேரங்களில் பனிமூட்டமும் நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்து இருக்கிறது.

பனிமூட்டம் அதிகரிப்பு:

வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்த தருணத்தில், தமிழ்நாடு அளவில் வறண்ட வானிலை சில நாட்களாக நிலவுகிறது. இதனால் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், விடிந்த பின்னர் மிதமான பனிமூட்டமும் காணப்படுகிறது. இது மாநில அளவில் குளிர்ந்த தன்மையை அதிகரித்துள்ளது. காற்றில் ஈரப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளது. Vikravandi Child Death: கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி.. பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் குமுறல்.!

காற்றின் தரம் மோசம்:

வானிலை சுழற்சிகள் காரணமாக விடிந்த பின்னரும் காற்று மேலெழும்பி செல்ல இயலாமல், ஈரப்பத தன்மை காரணமாக மாசு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தலைநகர் சென்னையில் காற்று மாசு என்பது கடுமையாக அதிகரித்து இருக்கிறது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதியை பொறுத்தமட்டில், காற்று மாசு அளவு 36 புள்ளிகள் (Air Quality Index AQI) அளவு இருந்தது.

மணலியில் உச்சக்கட்டம்:

அதேவேளையில், இன்று ஒட்டுமொத்த சென்னையின் காற்று மாசு தரக்குறியீடு 177 என்ற அளவுக்கும், சென்னை மணலியில் அதிகபட்ஷமாக 213 தரக்குறியீடு அளவுக்கும் சென்றுள்ளது. இதனால் காற்று சுவாசிக்க தகுதி அற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரை 180, வேளச்சேரியில் 162, ஆலந்தூரில் மிதமான அளவை குறிக்கும் 112 தரக்குறியீடு அளவில் காற்று மாசு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிற நகரப்பகுதியில் காற்றின் தரம்:

தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள அபிராமிபுரத்தில் 193 புள்ளிகள், அச்சுதன் நகரில் 151 புள்ளிகள், அந்தோணி பிள்ளை நகரில் 201 புள்ளிகள், அரும்பாக்கத்தில் 181 புள்ளிகள், காந்திநகர் எண்ணூரில் 116 புள்ளிகள், ஐஎன்டியுசி நகரில் 177 புள்ளிகள், கொடுங்கையூரில் 221 புள்ளிகள், கொரட்டூரில் 152 புள்ளிகள், குமாரசாமி நகரில் 187 புள்ளிகள், ராயபுரத்தில் 205 புள்ளிகள், பெருங்குடிகள் 187 புள்ளிகள், பொத்தேரியில் 167 புள்ளிகள், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 164 புள்ளிகள் என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்து இருக்கிறது.