Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 03, பெலகாவி (Karnataka News): கர்நாடக மாநிலம், பெலகாவியில் (Belagavi) உள்ள சிக்கோடியின் உமராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாளே (வயது 35). இவரது மனைவி சாவித்திரி (வயது 30). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீமந்த், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும், இருசக்கர வாகனம் வாங்க விரும்பிய அவர், பணத்துக்காக தனது மனைவியை பலருடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. Teenager Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டம் உயிர் பறித்த சோகம்.. லட்சங்களை இழந்ததால் விபரீதம்..!

கொடூர கொலை:

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 01) இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீமந்த், உல்லாசமாக இருக்க மனைவியை வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால், தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் (Sexual Abuse) செய்ய முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பெரிய கல்லை எடுத்து, கணவரின் தலையில் (Murder) போட்டுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கணவரின் உடலை இரண்டாக வெட்டி, சிறிய டிரம்மில் போட்டு, வீட்டின் அருகில் இருந்த வயலில் வீசினார். டிரம்மை கழுவி கிணற்றில் போட்டார்.

காவல்துறையினர் விசாரணை:

இதனையடுத்து, நேற்று (ஜனவரி 02) காலை வயலில் கிடந்த ஸ்ரீமந்த் உடலை பார்த்த அப்பகுதியினர், உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிக்கோடி காவல்துறையினர் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையில், சாவித்திரி தனக்கு எதுவும் தெரியாது என்றார். தீவிரமாக விசாரித்த போது, நடந்தவற்றை கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், நான் சிறைக்கு சென்றால், பிள்ளைகள் அனாதைகள் ஆவர் என பயந்துதான் நடந்ததை மறைத்தேன் என கூறினார். பின்னர், அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.