Vikram Prabhu's Love Marraige Movie First Look (Photo Credit: @VikramPrabhu X)

பிப்ரவரி 12, கோடம்பாக்கம் (Cinema News): சண்முக பிரியன் இயக்கத்தில், சியான் ரோல்டன் இசையில், லீலாவதி குமார் எடிட்டிங்கில், பரத் விக்ரமன் எடிட்டிங்கில் உருவாகி இருக்கும் திரைப்படம் லவ் மேரேஜ் (Love Marriage). இப்படத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, திலக் ரமேஷ், மீனாட்சி ஷிண்டே, சுஸ்மிதா பட் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரைஸ் ஈஸ்ட் என்டேர்டைன்மெண்ட், அசுர் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வழங்கியுள்ளது. Rajinikanth & Vijay: இணையத்தை பற்றவைத்த ரஜினி ரசிகரின் ஆடியோ.. வைரல் சம்பவமும், கண்டனமும்.. டிஜிட்டல் ஊடகங்களில் தொடரும் சண்டை.!

திருமணம் முடிந்த தம்பதிகளாக நாயகன் - நாயகி:

காதல் திருமணம் மற்றும் குடும்ப பாசம் தொடர்பான கதையுடன் தயாராகி இருக்கும் லவ் மேரேஜ் திரைப்படம், கோடை காலத்தில் திரைக்கு வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, பிற பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், இன்று படக்குழு சார்பில் படத்தின் முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த தம்பதிகளாக நாயகன் - நாயகி இருக்கும் புகைப்படமும், பின்னணியில் அவர்களின் குடும்பத்தினரும் இருக்கும் காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லவ் மேரேஜ் படத்தின் முதல் பார்வை (Love Marriage Movie Firs Look):