Elon Musk | Ashley St Clair File Pic (Photo Credit: @AFpost X)

பிப்ரவரி 15, வாஷிங்டன் (World News): டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (Elon Musk), அமெரிக்கா ஜனாதிபது டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் முக்கிய பணியாற்றி வருகிறார். அவர், தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2வது மனைவி க்ரீம்ஸ்க்கு 3 குழந்தைகளும் மற்றும் 3வது மனைவியான ஷிவோன் ஷில்லிஸ்க்கு 3 குழந்தைகளும் உள்ளனர். முதல் 2 மனைவிகளை விட்டு பிரிந்து, தற்போது 3வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். PM Modi - Donald Trump Meeting: "அவர் ஒரு சிறந்த தலைவர்" - அதிபர் டிரம்ப் புகழாரம்..!

பெண் எழுத்தாளர் பகீர் பதிவு:

இந்நிலையில், எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் (வயது 31) என்பவர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், '5 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்றேன். என் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை. குழந்தையின் பாதுகாப்பு காரணமாக, ஆரம்பத்தில் வெளியே சொல்லாமல் இருந்தேன். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திகள் கசிய தொடங்கியதால், தற்போது வெளியே சொல்ல முடிவு செய்தேன். எனது குழந்தை இயல்பான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வளர வேண்டும் என்பதே எனது நோக்கம். ஊடகங்கள், எங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.' இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

மறுபதிவு வெளியிட்ட பெண் எழுத்தாளர்:

இதற்கு ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், எலான் மஸ்க் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தப் பதிவை போட்ட சுமார் 3 மணிநேரத்திற்கு பின், ஆஷ்லே செயின்ட் கிளேர் (Ashley St Clair), 'தனக்கு ஆதரவு அளித்த அணைவருக்கம் நன்றி. குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதால், தற்போது எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுகிறேன்,' என தெரிவித்தார்.

பிரபல பெண் எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர் வெளியிட்ட பதிவு: