Mali Gold Mine Accident (Photo Credit: @KumariCr / @abnnewspk X)

பிப்ரவரி 16, மாலி (World News): மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி (Mali) நாட்டில், உள்நாட்டு குழப்பங்கள் அதிகம் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பிழைப்புக்காக பல்வேறு ஆபத்தான காரியத்தை முன்னெடுக்கும் சூழலில் சிக்கி தவித்து வருகின்றனர். பயங்கரவாத ஆதிக்கம், பொருளாதார பிரச்சனை என அங்குள்ள மக்கள் பல்வேறு இன்னல்களில் தவித்து வரும் நிலையில், அங்குள்ள கைவிடப்பட்ட தங்க சுரங்கங்களில் இருக்கும் தங்கங்களை தேடி சட்டவிரோத கும்பல் பல்வேறு செயல்களை முன்னெடுத்து வருகிறது. சுரங்கங்களில் இருக்கும் தங்கங்களை கைப்பற்ற, திரைப்பட பாணியில் மக்களை மிரட்டி பணியில் ஈடுபட அறிவுறுத்தி வருகிறது. 'Elon Musk Is The Father': "எலான் மஸ்க் தான் என் குழந்தைக்கு அப்பா".. பெண் எழுத்தாளர் பகீர் தகவல்..!

மீட்பு பணிகளில் அதிகாரிகள்:

இதனால் சில நேரங்களில் மக்கள் தங்க சுரங்கத்தில் பணியாற்றும்போது, அவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழக்கும் சோகமும் நடந்து வருகிறது. இந்நிலையில், மாலி நாட்டில் உள்ள மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிளால்காடோ (Bilalkoto)நகரம் ஒன்றில், சீன நிறுவனத்தால் கைவிடப்பட்ட சுரங்கத்தில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தங்க சுரங்கத்தில் பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் வேலை பார்த்ததாக கூறப்படும் நிலையில், மொத்தமாக தற்போது வரை 48 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 48 பெண்கள் பலியானதாக செய்தி:

விபத்து நடைபெற்ற இடத்தில் சேகரிக்கப்பட்ட வீடியோ: