DC Vs MI Women's WPL 2025 Winnng Moment (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 16, வதோதரா (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025ல், நேற்று (16 பிப்ரவரி 2025) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals Women's WPL 2025) - மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians Women's WPL 2025) அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் இறுதி பந்தில் டெல்லி அணி வெற்றிபெறுமா? தோல்வி அடையுமா? என்ற கணிக்க இயலாத நிலை இருந்தது. MI Vs DC Women's WPL 2025 Highlights: ரசிகர்களின் இதயங்களை பதறவைத்து டெல்லி அணி திரில் வெற்றி.. வர்மா அசத்தல் ஆட்டம்.! 

பதைபதைப்பை தந்த இறுதி நொடி:

கிட்டத்தட்ட இறுதி பந்தை எதிர்கொண்ட அருந்ததி ரெட்டி பவுண்டரியை எதிர்நோக்கி பந்தை எதிர்கொண்டாலும், அவர் தொடர்ந்து 2 ரன்களை ஓடியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் இரண்டாவது ரன்னை சேகரித்தபோது, பவுண்டரி லைனுக்கு சென்ற பந்து ஸ்கிப்பர் நோக்கி வந்தது. விரைந்து ஓடிய அருந்ததி ரெட்டி, திரில் வெற்றி அடைந்தார். இறுதி பந்தில் விக்கெட்டை இழந்து நாம் வெற்றி அடைந்தோம் என மும்பை இந்தியன்ஸ் அணியினர் ஒரு நொடி உற்சாகத்தில் இருந்து, பின் தாங்கள் விக்கெட் எடுக்கவில்லை என்பதை உணர்ந்து சோகத்தில் ஆழ்ந்தனர். இன்ப அதிர்ச்சியாக வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் டெல்லி அணியினர் ஆரத்துள்ளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதி ஓவரில் நடந்த மாயாஜாலம்:

டெல்லி அணி வெற்றிபெற்ற இறுதி தருணத்தின் காட்சியை இங்கு காணவும்: