Actor Vishal at Panjruli Kantara Temple at Mangalore (Photo Credit: @HariKr_official X)

பிப்ரவரி 13, மங்களூர் (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், ரசிகர்களால் புரட்சி தளபதி என கவனிக்கப்படும் நடிகர் விஷால் (Actor Vishal). இவரின் நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் மெகா ஹிட் அடித்திருக்கின்றன. சமீபத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த மதகஜராஜா திரைப்படம், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வெளியானது. தொடர்ந்து விஷாலின் நடிப்பில் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. Kingdom Tamil Teaser: "ஒரு தலைவன் பிறப்பான்" - சூர்யாவின் குரலில் மெய்சிலிர்க்கவைக்கும் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' டீசர் உள்ளே..! 

ஹிட் படங்களை கொடுத்த நடிகர்:

சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, சத்யம், வெடி, பூஜை, ஆம்பள, இரும்புத்திரை என பல பல படங்களில் நடித்து வெற்றிப்படங்களை கொடுத்தவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வாயிலாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். இதனிடையே, தற்போது நடிகர் விஷால், கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரிலிருக்கும் ஜரந்தய தெய்வா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ஜரந்தய தெய்வா பஞ்சுருளி என்று அழைக்கப்படுகிறது. Kudumbasthan: குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல் ஹாசன்; மகிழ்ச்சியில் படக்குழு.! 

காந்தாரா கோவிலில் விஷால் (Actor Vishal at Kantara Panjruli Temple):

கர்நாடகா & கேரளா மாநில எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்யம், பஞ்சுருளி என அழைத்து வணங்கி வரும் வனத்தெய்வமான பஞ்சுருளி, நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படத்தின் வாயிலாக தன்னை பாரெங்கும் அறிமுகப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், உலகளவில் ரூ.500 கோடிகளை கடந்து மிகப்பெரிய வசூல் மற்றும் மக்களின் வரவேற்புகளை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

காந்தாரா தெய்வத்தின் அருளை எதிர்நோக்கி விஷால்:

காந்தாரா படத்தின் முக்கிய காட்சிகள் உங்களின் பார்வைக்கு: