
பிப்ரவரி 15, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League 2025) கிரிக்கெட் போட்டிகள், பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 15 வரை நடைபெறுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals Women's Team), குஜராத் ஜெயின்ஸ் (Gujarat Giants Women's Team), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians Women's Team), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore Women's Team), யுபி வாரியர்ஸ் (UP Worriers Women's Team) என ஐந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில், மொத்தமாக 22 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. வெற்றிபெறும் அணி மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் நடப்பு ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வெல்லும். நேற்று வதோதரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Gujarat Giants Vs Royal Challengers Bangalore Women's T20 WPL 2025) அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆட்டத்தில், பெங்களூர் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. Pak Vs NZ ODI Tri-Series Final: சொந்த மண்ணில் மண்ணைக்கவ்விய பாகிஸ்தான்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி.!
பெண்கள் பிரீமியர் லீக் இரண்டாவது ஆட்டம் (Women's Premier League Match 2):
இன்று பெண்கள் பிரீமியர் லீக் (Women's Premier League) இரண்டாவது ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் (Mumbai Indians Vs Delhi Capitals Women's WPL 2025) மோதுகிறது. இன்று இரவு 07:30 மணியளவில் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா, பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் ஆட்டத்தின் இருக்கை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. வார இறுதி விடுமுறை என்பதாலும், மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி மோதுகிறது என்பதாலும், ஆட்டம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. GG Vs RCB Women's WPL 2025 Highlights: டாடா மகளிர் டி20 பிரீமியர் லீக்.. வெற்றியுடன் தொடங்கிய பெங்களூர் அணி.. ரிச்சா கோஷ், எலிசே அசத்தல் ஆட்டம்.!
மும்பை டி20 அணியின் வீரர்கள்:
ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பெண்கள் (Mumbai Indians Women's WPL T20 Squad) கிரிக்கெட் அணியில், அக்ஷிதா மகேஸ்வரி, அமன்தீப் கவுர் (Amandeep Kaur), அமஞ்சோத் கவுர், அமெலியா கேர், சோலி ட்ரையன், ஹெலேய் மெத்திவ்ஸ், நடினே டி, நடைலே சீவர் புரண்ட், சஜனா எஸ், கமலினி ஜி, ஜின்திமணி கலிடா, கீர்த்தனா பாலகிருஷ்ணன், பருணிகா சிசோடியா, சைகா இஷாக், சன்ஸ்கிரிதி குப்தா, சப்னிம் இஸ்மாயில், பூஜா வஸ்திரக்கர், யஸ்டிக்கா பாட்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி டி20 அணியின் வீரர்கள்:
மேக் லின்னிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் (Delhi Capitals Women's WPL T20 Squad) கிரிக்கெட் அணியில், ஜெமியா ரோட்ரிக்ஸ், நிகி பிரசாத், சபில் வர்மா, சினேகா தீப்தி, அலிஸ் காப்செ, அன்னபெல் சுதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, ஜெஸ் ஜானஸன், மரீசானே காப், மின்னு மணி, ஷிகா பாண்டே, நந்தினி காஷ்யப், சாரா ப்ரயஸ், தனியா பாட்டியா, ராதா யாதவ், திலஸ் சாது, என் சாரணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நேரலை விபரம் (Women's T20 WPL Live Watching 2025):
இந்த ஆட்டங்களை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) லும், ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hot Star) லும் நேரலையில் பார்க்கலாம்.