Judgement (Photo Credit: Pixabay).jpg

பிப்ரவரி 15, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலத்தில் காதல் ஜிஹாத் (Love Jihad) எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதற்காக, காவல்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையில் (State Director General of Police) 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, அதன் உத்தரவு நேற்று (பிப்ரவரி 14) பிறப்பிக்கப்பட்டது. உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்கள் காதல் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளன. இக்குழு சட்டங்களை ஆய்வு செய்து மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். Prayagraj Accident: பேருந்து - பிக்கப் வாகனம் மோதி பயங்கரம்; ஆன்மீக பக்தர்கள் 10 பேர் மரணம்., 12 பேர் படுகாயம்.!

7 பேர் கொண்ட குழு:

காதல் ஜிஹாத் தொடர்பாக, காவல்துறையினரால் பெறப்படும் புகார்களின் வகைகளை இக்குழு ஆய்வு செய்யும். மேலும், சட்டங்களை இயற்றிய மாநிலங்களை ஆய்வு செய்து, சட்டத்தின் படி, மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவில், மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளர், சிறுபான்மையினர் மேம்பாட்டுத் துறை செயலாளர், சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், சமூக மற்றும் நீதி சிறப்பு உதவித் துறை செயலாளர். உள்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவர்.