PM Modi - Donald Trump Meeting (Photo Credit: @youngbitesjammu X)

பிப்ரவரி 14, வாஷிங்டன் (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் (US President Donald Trump), அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செயலர் துல்சி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, அமெரிக்கா-இந்திய வாழ் மக்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி சந்தித்து இருந்தார். டிரம்ப் 2வது முறையாக அதிபரான பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், இன்று முதல் முறையாக சந்தித்தனர். இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

வெள்ளை மாளிகையில் இரு பெருந்தலைவர்கள்:

பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு வெள்ளை மாளிகையில் (White House) சர்வதேச செய்தியாளர்களிடம் உரையாற்றினர். அதில், "ஜனாதிபதி டிரம்ப் எப்போதும் தனது நாட்டை முதன்மையாக வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன். நானும் அதையே செய்கிறேன். அது எங்களுக்கு பொதுவான ஒன்று," என்று கூறினார், அதற்கு டொனால்ட் டிரம்ப், "அவர் இந்தியாவில் சிறப்பாக பணியாற்றி வருகிறார், அவரும் நானும் ஒரு சிறந்த நட்பை கொண்டுள்ளோம். மேலும், எங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்" எனக் கூறினார்.  PM Narendra Modi: அமெரிக்கா பயணம் நிறைவு; டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.!

பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு:

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரிகள் மற்றும் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த கேள்விக்கு, டொனால்ட் டிரம்ப் கூறுகையில், "பிரதமர் மோடி ஒரு சிறந்த தலைவர்", மேலும் "நாங்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் சில அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யப் போகிறோம்" என்று கூறினார். இருப்பினும், இருதரப்பு சந்திப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ஜனாதிபதி டிரம்ப் அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுடன் அதிக வரிகளைத் தவிர்ப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும், சாதகமான ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியின் முன்னுரிமையாக இருக்கும்.

10வது அமெரிக்க பயணம்:

மேலும், வெளிநாட்டு முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், விசாக்கள் மற்றும் குடியேற்றம் தொடர்பான விஷயங்களும் பேசப்பட்டன. டிரம்ப் ஜனாதிபதியாக இருக்கும்போது, மோடியின் நான்காவது பயணமாகும். 2024ஆம் ஆண்டில் பைடன் அவரை ஒரு சம்பிரதாய அரசு பயணமாக வரவேற்றார். இந்தியாவில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2014ஆம் ஆண்டு ஒபாமா அதிபராக இருந்தபோது, முதல் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். தற்போது, டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இது பிரதமராக மோடியின் 10வது அமெரிக்க பயணமாகும்.