Bikers Escape from Death (Photo Credit: @ChotaNewsApp X)

பிப்ரவரி 16, பாட்னா (Bihar News): தொழில்களின் வளர்ச்சிக்கு பின்னர் அறிமுகமான இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து வாகனங்கள், மக்களின் பயணம், தகவல் பரிமாற்றம், பொருட்கள் இடமாற்றம் உட்பட பல்வேறு விஷயங்களை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. இன்றளவில் அருகில் இருக்கும் தெருமுனை கடை முதல் பக்கத்து மாநிலம், வெளியூர் என பல இடங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருசிலர் அதனை காலத்துக்கேற்ப தொழில்முறை பயணமாகவும் மாற்றி வாழ்க்கையில் சாதித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலைகளில் கவனமாக செல்ல வேண்டும், 2 பேர் மட்டுமே அதில் பயணிக்க வேண்டும். தலைக்கவசம் அணிய வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவோர், சாலையோரம் - இடப்புறம் இருக்கும் வெள்ளைக்கோட்டுக்குள் பயணிக்க அறிவுறுத்தப்படும். Prayagraj Accident: பேருந்து - பிக்கப் வாகனம் மோதி பயங்கரம்; ஆன்மீக பக்தர்கள் 10 பேர் மரணம்., 12 பேர் படுகாயம்.! 

இளைஞர்களின் அதீத தைரியம், எமனை நேரில் பார்க்க வைத்த தருணம்:

ஏனெனில், பிற இரண்டு வழித்தடத்தில் கனரக, அதிவேக வாகனங்கள் பயணம் செய்யும். ஆனால், இன்றளவில் இருக்கும் சிலர், தங்களின் நேரமின்மை, அதீத அனுபவ நம்பிக்கை போன்ற காரணத்தால், தங்களுக்கு பிடித்த வகைகளில் வாகனத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாட்னா தேசிய நெடுஞ்சாலையில், விதிகளை மீறி 3 பேராக இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் குழு பயணம் செய்தது. இவர்கள் கார் - கனரக வாகனத்தின் நடுவே புகுந்து முந்திச் செல்ல முற்பட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக வாகனத்தில் மோதி விழுந்தனர். நல்வாய்ப்பாக அவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினாலும், நூலிழையில் மரணம் தவிர்க்கப்பட்டது.

இளைஞர்கள் விபத்தில் சிக்கிய பதறவைக்கும் காட்சிகள்: