Youth Suicide Attempt: ரேஷன் கார்டு வழங்காததால் ஆத்திரம்; வாலிபர் தற்கொலை முயற்சி.. பரபரப்பு சம்பவம்..!
தெலுங்கானாவில் ரேஷன் கார்டு வழங்காததால் தாசில்தார் அலுவலகத்தில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 14, காமரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலம், காமரெட்டி (Kamareddy) மாவட்டம், நிஜாம்சாகர் மண்டலத்தில் உள்ள மல்லுரு கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் கவுட். இவர், ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை எனக் கூறி, தாசில்தார் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். தனது ரேஷன் கார்டு குறித்து எத்தனை முறை கேட்டாலும் அதிகாரிகள் முரண்பாடான பதில்களை அளிப்பதால், ஆத்திரமடைந்த அவர், தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Teenager Beaten To Death: டீக்கடையில் வாக்குவாதம்; இரு கும்பல் மோதலில் வாலிபர் படுகொலை..!
வீடியோ இதோ:
రేషన్ కార్డు ఇవ్వడం లేదని ఎమ్మార్వో ఆఫీస్లో పెట్రోల్ పోసుకొని ఆత్మహత్యాయత్నానికి పాల్పడ్డ యువకుడు
కామారెడ్డి జిల్లా నిజాంసాగర్ మండలం మల్లూరు గ్రామానికి చెందిన సందీప్ గౌడ్ అనే యువకుడు రేషన్ కార్డు ఇవ్వడం లేదని, ఎమ్మార్వో ఆఫీస్లో పెట్రోల్ పోసుకొని ఆత్మహత్యాయత్నానికి పాల్పడ్డాడు… pic.twitter.com/vOaJ9DsXRY
— Telugu Scribe (@TeluguScribe) February 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 0461 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

