
பிப்ரவரி 14, சென்னை (Kitchen Tips): உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால், உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் அற்புதமான ரெசிபி இதில் பார்ப்போம். கொள்ளு (Horse Gram)விதைகளானது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது. இந்தக் கொள்ளு பயன்படுத்தி கஞ்சி செய்து குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறையும் மற்றும் உடலும் வலுபெறும். அப்படிப்பட்ட கொள்ளு கஞ்சி (Kollu Kanji) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Thattai Payaru Sadam Recipe: சத்தான தட்டைப்பயறு சாதம் சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
அவல் - 200 கிராம்
பூண்டு - 10 பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
தண்ணீர் - 400 மில்லி லிட்டர்
சுடுதண்ணீர் - தேவையான அளவு
தயிர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு விதைகளை சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்கவும். பின்பு, அதே பாத்திரத்தில் அவல் சேர்த்து நன்கு வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின், மிக்ஸியில் கொள்ளுவை சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். பிறகு, குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அவல் மற்றும் பொடித்த கொள்ளுவை சேர்த்து, பின் அதில் நீரை ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் மற்றம் சீரகத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கலந்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
- பிறகு, விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு மசித்து கிளறிவிட்டு, பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சுடுதண்ணீரை ஊற்றி கலந்து கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, கஞ்சியுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின்னர், குடிக்கும் போது இந்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அத்துடன் தேவையான அளவு தயிரை ஊற்றி, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நீரை ஊற்றி கலந்து குடிக்க வேண்டும். சத்தான உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு கஞ்சி தயார்.