Team India at Dubai for ICC Champions Trophy 2025 (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 16, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டிகள் பிப்ரவரி 19, 2025 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. 8 அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், 1996ம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் வைத்து நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களின் பாதுகாப்பு கருதி பிசிசிஐ தனது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப முன்வராத நிலையில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. ICC Champions Trophy 2025: ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் ட்ராபி 2025: வெற்றிபெறும் அணிக்கு பரிசு எவ்வுளவு தெரியுமா? அசத்தல் தகவல் இதோ.! 

ஐசிசி இந்திய தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் (Team India Squad for ICC Champions Trophy 2025):

ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மன் ஹில் (Shubman Gill) துணை கேப்டனாக செயல்படுவார். அணியில் விராட் கோலி (Virat Kohli), ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer), கேஎல் ராகுல் (KL Rahul), ரிஷப் பண்ட் (Rishabh Pant), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), அக்சர் படேல் (Axer Patel), வாஷிங்க்டன் சுந்தர் (Washington Sundar), குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), ஹர்ஷித் ராணா (Hashit Rana), முகம்மத் சமி (Mohd Shami), அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Harmanpreet Kaur T20 Runs: மகளிர் டி20 போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை; 8000 ரன்களை கடந்து அசத்தல்.! 

இந்திய அணிக்கு வரவேற்பு:

இந்நிலையில், துபாய் சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்தபடி ஐசிசி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் ட்ராபி 2025 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி பிப்.20 அன்று நியூசிலாந்து அணியையும், பிப்.23 அன்று பாகிஸ்தான் அணியையும், மார்ச் 02 அன்று நியூசிலாந்து அணியையும் எதிர்கொண்டு களம்காண்கிறது. சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகையும், இரண்டாவது ரன்னர் அணிக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு: