
பிப்ரவரி 14, சென்னை (Chennai News): சமீப காலமாக திரை பிரபலங்கள் சமூகவலைதளத்தில் ஐஸ்கட்டிகள் குளியல் செய்வதாக சொல்லி டிரெண்ட் செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் ஃபாலோவர்கஸைக் கொண்டுள்ள ரகுல் ப்ரீத்தி சிங் சமீபத்தில் பிகினி உடை அணிந்தவாறு பனிக்கட்டி சூழ்ந்த தண்ணீருக்குள் குளியல் செய்த வீடியோவை பதிவிட வைரலானது. நடிகை சமந்தாவும் ஐஸ்கட்டிகள் நிறைந்த தண்ணீருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படமும் வைரலானது. இது அவருக்கு ஏற்பட்ட தசை நோயிலிருந்து ரெகவர் செய்வதற்காக செய்வதாக தெரிவித்து புகைப்படத்தை பதிவிட்டுருந்தார். இதே போல் கிரிகெட் பிரபலம் விராட் கோலி, பாலிவுட் நடிகர் வித்யூத் ஜெம்வால், அமேரிக்க பாடலி லேடி காஹா போன்றோரும் ஐஸ் பத் செய்யும், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஐஸ்பாத்:
மைனஸ் 8 முதல் 15 டிகிரி குளிச்சியான நீரில், 10 முதல் 15 நிமிடங்கள் வரை எடுக்கும் இந்த குளியல், கிரையோதெரபி கீழ் வருகிறது. இது பல வகையில் உடலுக்கு நன்மை பயக்கிறது. அதிகமாக உடலுக்கு வேலை கொடுப்பதால் ஏற்படும், தசை இறுக்கத்தை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. சீரற்ற இரத்த வோட்டம், நரம்பு வீக்கம், வலிகளை சரிசெய்து உடலை சீராக பராமரிக்கிறது. உடலைக் கட்டுகோப்பாகவும், சருமத்தின் சுருக்கம் வரமாலும் வைக்கிறது. குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் வெப்பனிலை மாற்றப்படுகிற்து. இதனால் மூளையின் நரம்பில் வேதியியலும் மாற்றப்படுகிறது. இதனால் அழுத்தமான மனநிலை நீங்கும். மகிழ்ச்சியான அமைதியான மன நிலைக்கும் இது வழிவகுக்கிறது. இந்த ஐஸ் பாத்திங் தடகள வீரர்கள் எடுத்துக் கொள்ளும் முறையாகும். Biofloc Fish Farming: பயோ ஃப்ளாக் மீன் வளர்ப்பு.. ஓர் ஆண்டுக்கு தொட்டிக்கு ₹50000-க்கு மேல் லாபம்.. விபரம் உள்ளே.!
எவ்வாறு ஐஸ்-ஸில் குளிப்பது?
3:1 என்ற விகிதத்தில் தண்ணீரையும், ஐஸ்-யும் பயன்படுத்த வேண்டும். இதை போட்டு 10 நிமிடத்திற்கு பின் இறங்கலாம். முன்பே உலர் ஆடைகளையும், கதகதப்பளிக்கும் பானங்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவது நல்லது. குளிந்த நீரில் இறங்குவதற்கு முன் உடலில் வெப்ப நிலையை படிப்படியாக சற்று குளிர்ச்சியாக மாற்ற வேண்டும். எடுத்தவுடனேயே மைனஸ் 15 டிகிரி தண்ணீரில் இறங்காமல் படிப்படியாக குறைக்கலாம். தண்ணீருக்குள் இருக்கும் நேரத்தின் அளவும் 5 நிமிடங்களில் இருந்து பழக்கப்படுத்தலாம். அதிகபட்சமாக 15 நிமிடத்திற்கு மேல் தண்ணீருக்குள் இருக்க வேண்டாம். ஆடைகள் அளவையும் உடல் வெப்ப நிலைக்கு ஏற்ற பயன்படுத்தலாம். முறையான செய்முறையை பின்பற்றினால் தினமும் ஐஸ்பாத் எடுக்கலாம். வீட்டிற்கு தனியாக ஐஸ் குளியல் தொட்டிகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே ஐஸ்பாத் செய்வதற்கு முன் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.
தவிர்க்க வேண்டியவர்கள்:
இந்த ஐஸ்பாத்தை, இதயக்கோளாறு உள்ளவர்கள், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களும் தவிக்க வேண்டும். வெப்பனிலை மாற்றத்தால் தண்ணீருக்குள் இறங்கும் போது இதயத்துடிப்பு அதிகரிக்கும் நுரையீரல் வீக்கமடையவும் வாய்ப்புள்ளது. அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.