ZIM Vs IRE 2nd ODI Toss Update (Photo Credit: @cricketireland X)

பிப்ரவரி 16, அலெக்ஸாண்டர் பார்க் (Sports News): ஜிம்பாவே (Zimbabwe) நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து தேசிய கிரிக்கெட் அணி (Ireland Cricket Team), ஜிம்பாவே தேசிய கிரிக்கெட் அணி (Zimbabwe Cricket Team) உடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் (Ireland Vs Zimbabwe ODI Series 2025) தொடரில், முதல் ஆட்டத்தில் ஜிம்பாவே அணி வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இன்று இரண்டு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி (IRE Vs ZIM 2nd ODI) இன்று மதியம் இந்திய நேரப்படி 1 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: துபாய் சென்றது இந்திய அணி.! உற்சாக வரவேற்பு.! 

அயர்லாந்து - ஜிம்பாவே அணி:

போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, ஜிம்பாவே அணி பேட்டிங் செய்கிறது. பால் ஷிடிர்லிங் தலைமையிலான அயர்லாந்து (Ireland Vs Zimbabwe Team Ireland Squad for 2nd ODI 2025) அணியில் ஆண்டி பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டாக்ரெல், ஆண்டி மெக்பிரின், மார்க் அடேர், கிரஹாம் ஹியூம், ஜோஷ் லிட்டில், மத்தேயு ஹம்ப்ரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கிரைக் எர்வின் தலைமையிலான ஜிம்பாவே அணியில் (Ireland Vs Zimbabwe Team Zimbabwe Squad for 2nd ODI 2025) தார்டாரகாஷியா மருமணி, பென் கர்ரன், சிக்கந்தர் ராசா, வெஸ்லி மதவேரா, பிரையின் பென்னட், ஜொனாதன் கம்பெல், வெல்லிங்டன் மச்சகட், ரிச்சர்ட் நகரவா, ப்ளஸிக் முசார்பணி, ட்ரெவர் கவண்டு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டாஸ் வென்று அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு: