Match 3 UP Warrorz Vs Gujarat Giants WPL 2025 (Photo Credit: Team LatestLY)

பிப்ரவரி 16, வதோதரா (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League WPL 2025) போட்டியில், மூன்றாவது ஆட்டம் இன்று குஜராத் ஜெயிண்ட்ஸ் (Gujarat Gianst Women's Team)- உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's Team) மகளிர் அணியிடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா, பிசிஏ கிரிக்கெட் (BCA Stadium Vadodara) மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இன்று இரவு 07:30 மணியளவில் ஆட்டம் தொடங்கி நடக்கிறது. இன்றைய ஆட்டம் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு இரண்டாவது போட்டி ஆகும். Delhi Capitals Victory Video: ஹார்ட்பீட்டை எகிற வைத்த டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் அணி; நடந்த சுவாரஷ்யம்.. வீடியோ உள்ளே.! 

தீவிர பயிற்சியில் குஜராத், உபி அணிகள்:

முன்னதாக குஜராத் ஜெயிண்ட்ஸ் (Gujarat Giants WPL 2025) அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore Women's WPL 2025) அணி மோதியது. இப்போட்டியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. முதல் போட்டியை தவறவிட்ட குஜராத் அணி, இன்றைய போட்டியில் வெற்றி அடைய வேண்டும் என தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. அதே நேரத்தில், உபி வாரியர்ஸ் அணி, வெற்றியுடன் தொடரை அணுக வேண்டி பயிற்சி எடுக்கிறது. இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி சுவாரசியத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: துபாய் சென்றது இந்திய அணி.! உற்சாக வரவேற்பு.! 

குஜராத் ஜெயிண்ட்ஸ் - உபி வாரியர்ஸ் அணி வீரர்கள் (Gujarat Giants Women's Squad - UP Warriorz Women's Squad WPL 2025):

குஜராத் கிரிக்கெட் (Gujarat Giants Women's WPL Squad 2025) அணியில் புமாலி, ஹேமலதா, வோல்வார்ட், லிட்சிபீல்ட், சைக், கார்ட்னெர், சிப்சன், டோடின், டியோல், சத்கரே, மூனி, கைஸ்யப், மேகா சிங், பிரக்சிதா நாயக், பிரியா மிஸ்ரா, சப்னம், தனுஜா கன்வர், காசவ் கௌதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை கேப்டனாக (Gujarat Giants Women's Team Captain) ஆஷ் கார்ட்னெர் (Ashleigh Gardner) வழிநடத்துகிறார்.

உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's WPL Squad 2025) அணியில் ஆருஷி ஜோயல், கிரண் நவ்கிரெ, ஸ்வேதா செஹ்ராவாத், விர்ந்தா தினேஷ், சமாரி அதப்பத்து, சினலே ஹென்றி, கிரேஸ் ஹாரிஸ், பூனம் கெம்னர், தஹியா மேக்ராத், உமா சேத்ரி, அஞ்சலி சர்வானி, கெளஹர் சுல்தானா, கிராந்தி காட், ராஜேஸ்வரி கெய்க்வாட், சல்மா தாகோர், சோபி எஸ்லேஸ்டோன், அலனா கிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை கேப்டனாக தீப்தி ஷர்மா (Deepti Sharma) வழிநடத்துகிறார்.

நேரலை விபரம் (WPL 2025 Live Broadcast):

இந்த போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hot Star) ஓடிடி செயலியில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) நேரலையில் பார்க்கலாம்.