Harmanpreet Kaur T20 Runs Achievements (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 15, வதோதரா (Sports News): இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையான ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur), கடந்த 2009ம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இணைந்து, பல்வேறு வகையான தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டியில் விளையாடி வருகிறார். பெண்கள் இந்திய கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை படைத்தது வரும் ஹர்மன்பிரீத், தற்போது டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League WPL 2025) போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians Women's T20 Cricket Team) அணிக்காக விளையாடுகிறார். நேற்று முதல் மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இரண்டாவது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் (Mumbai Indians Vs Delhi Capitals Women's T20 WPL 2025) அணிகள் இடையே போட்டி நடந்தது. MI Vs DC Women's WPL 2025 Highlights: ரசிகர்களின் இதயங்களை பதறவைத்து டெல்லி அணி திரில் வெற்றி.. வர்மா அசத்தல் ஆட்டம்.! 

ஹர்மன்பிரீத் 8000 ரன்கள் எடுத்து சாதனை (Harmanpreet Kaur 8000 Runs Achievement):

இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். போட்டியின் முடிவில் அவரின் அணி தோல்வியை தழுவினாலும், ஹர்மன்பிரீத் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, டி20 போட்டிகளில் 8005 ரன்கள் அடித்து விளாசி ஹர்மன்பிரீத் சாதனை செய்துள்ளார். இதன் வாயிலாக, ஹர்மன்பிரீத் இந்திய கிரிக்கெட் அணியில், அதிக ரன்கள் விகிதத்தில் உள்ள வீரர்களில் இரண்டாவது வீரர் என்ற விஷயத்தில் புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறார். இதே பட்டியலில் 8349 ரன்களுடன் ஸ்ம்ருதி மந்தனா (Smriti Mandhana) இருக்கிறார். ஜெமியா 5826 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், ஷபலி வர்மா 4542 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், மிதலி ராஜ் 4329 ரன்களுடன் நான்காவது இடத்திலும், தீப்தி சர்மா (Deepti Sharma) 3889 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்.

8000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ள ஹர்மன்பிரீத் கவுர்: