Vijay Deverakonda's Kingdom Teaser (Photo Credit: YouTube)

பிப்ரவரி 12, ஹைதராபாத் (Cinema News): சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ், பார்டியுன் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், கெளதம் திண்ணனுரி (Gowtam Tinnanuri) இயக்கத்தில், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கிங்டம் (Kingdom). இப்படத்திற்கு இசையமைப்பு பணிகளை அனிரூத் ரவிச்சந்தரும், எடிட்டிங் பணிகளை நவீன் நூலியும், ஜோமன் மற்றும் கிரிஷ் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டு இருக்கின்றனர். மே 30, 2025 இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம் உட்பட பிற மொழியிலும் உலகளவில் வெளியிடப்படுகிறது. Kudumbasthan: குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல் ஹாசன்; மகிழ்ச்சியில் படக்குழு.! 

சூர்யாவின் பின்னணி குரல்:

கே.ஜி.எப், சலார், வடசென்னை, பத்து தல என தாதாக்களின் பக்கம் இருக்கும் விஷயங்களை பேசும் கதையை போல, அடிமைகளை போல நடத்தப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கலாம் என்பது படத்தின் டீசர் காட்சிகள் வாயிலாக தெரியவருகிறது. இப்படத்தின் தமிழ் டீஸருக்கான பின்னணி குரலை நடிகர் சூர்யா பதிவு செய்துள்ளார். அவரின் கம்பீர குரலில் வெளியாகியுள்ள படத்தின் டீசர் மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

கிங்டம் படத்தின் தமிழ் டீசர் (Kingdom Tamil Teaser):