Spam (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 07, புதுடெல்லி (New Delhi): தற்போது கையில் செல்போன் வைத்திருந்தாலே ஒரு வித பயம் எல்லோருக்கும் உருவாகிறது. அதிலும் தினமும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதன் மூலம் ஏற்படும் மோசடிகள் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. இதனாலேயே பல நேரங்களில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக மோசடி அழைப்பாக இருக்கும் என்று எண்ணி அழைப்பை எடுக்காமல் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பல முக்கிய அழைப்புகளை தவறவிடுகின்றோம். நாம் இன்று ஒரு எண்ணை பிளாக் செய்தாலும், மீண்டும் புதிய எண்களில் இருந்து நம்மை தொடர்பு கொள்கிறார்கள்.

இதனை சமாளிப்பதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்தியாவில் பெரிய டெலிகாம் நிறுவனங்கள் மீது தற்போது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து பல நாட்களாகவே இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் இது போன்ற அழைப்புகளை தடுத்து நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால் இது குறித்து நிறுவனங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அந்த நிறுவனங்களுக்கு இதுவரை ரூபாய் 110 கோடி அபராதம் விதித்துள்ளது. தற்போது எந்த டெலிகாம் நிறுவனத்திற்கு (Telecom companies) எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. 15 Former MLAs Join BJP: பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு.. சூடுபிடிக்கப்போகும் தேர்தல் களம்..!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) ஆகிய மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாட்டில் உள்ளன. இது தவிர, அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதிக எண்ணிக்கையிலான பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த சிம்களை பயன்படுத்தியே பல டெலிகாம் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், சைபர் குற்றவாளிகளால் பறிக்கப்பட்ட கிட்டத்தட்ட ரூ. 1,000 கோடி, அரசாங்கத்தால் மீட்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களில் எடுக்கப்பட்ட மொபைல் இணைப்புகளுடன் இணைக்கப்பட்டதால், கிட்டத்தட்ட 9.9 லட்சம் வங்கிக் கணக்குகள் மற்றும் பேமெண்ட் வாலட்டுகள் முடக்கப்பட்டன. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட டெலிமார்க்கெட்டர்களுக்கு டிராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி போலி அல்லது போலி ஆவணங்களில் பெறப்பட்ட 55.5 லட்சம் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக டிராய் தெரிவித்துள்ளது.