GG Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் அணிக்கு 144 ரன்கள் இலக்கு.. பந்துவீச்சில் அசத்திய பிரியா மிஸ்ரா.!

மூன்றாவது பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில், குஜராத் அணிக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் மிஸ்ராவின் பந்துவீச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

GG Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் அணிக்கு 144 ரன்கள் இலக்கு.. பந்துவீச்சில் அசத்திய பிரியா மிஸ்ரா.!
GG Vs UPW Women's WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 16, வதோதரா (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League WPL 2025) போட்டியில், மூன்றாவது ஆட்டம் இன்று குஜராத் ஜெயிண்ட்ஸ் (Gujarat Gianst Women's Team)- உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's Team) மகளிர் அணியிடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா, பிசிஏ கிரிக்கெட் (BCA Stadium Vadodara) மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இன்று இரவு 07:30 மணியளவில் ஆட்டம் தொடங்கியது. GG Vs UPW WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று குஜராத் - உபி வாரியர்ஸ் மோதல்.! நேரலை நேரம், பார்ப்பது எப்படி? தகவல் இதோ.! 

144 ரன்கள் இலக்கு நிர்ணயம்:

முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால் உபி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் கிரண் 8 பந்துகளில் 15 ரன்னும், உமா 27 பந்துகளில் 24 ரன்னும், கீர்த்தி சர்மா 27 பந்துகளில் 39 ரன்னும், சுவேதா 18 பந்துகளில் 16 ரன்னும், சைமா 7 பந்துகளில் 15 ரன்னும் அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்த உபி வாரியர்ஸ் அணி (UP Warriorz Team WPL 2025) 143 ரன்கள் எடுத்தது. இதனால் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கவுள்ளது. IPL 2025 Schedule: ஐபிஎல் 2025 போட்டிகள்.. முழு பட்டியல் இதோ.! 

தீப்தி சர்மாவின் (Deepti Sharma) விக்கெட்டை கைப்பற்றிய கார்ட்னர்:

பிரியா மிஸ்ரா (Priya Mishra) விக்கெட் எடுத்து அசத்திய காட்சி:

(The above story first appeared on LatestLY on Feb 16, 2025 09:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).