15 Former MLAs Join BJP (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 07, சென்னை (Chennai): தற்போது நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலினை முன்னிட்டு தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அனைவரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு பக்கம் சட்டமன்ற தேர்தலுக்காக நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றினை தொடங்கியுள்ளார். மறுபக்கம் நாடாளுமன்ற தேர்தலுக்காக மற்ற கட்சிகள் கூட்டணிகளையும் கொள்கைகளையும் தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். மேலும் சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது.

தமிழகத்தில் முன்னணி இருக்கும் பெரிய கட்சிகள் என்றால் அது திமுக மற்றும் அதிமுக தான். இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாவது அணியாக மாறுவதற்கு பல கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி பாஜக கட்சியின் (BJP) அடித்தளத்தை விரிவு படுத்துவதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏக்களும், ஒரு முன்னாள் எம்பியும் பாஜகவில் இணைந்தனர். Vishal Politics: அரசியல் கட்சி தொடங்குகிறாரா விஷால்?. வெளியான பரபரப்பு அறிக்கை..!

பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள்: நேற்று மாலை பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையுடன் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில், இவர்கள் கட்சியில் சேர்வதற்காக தலைநகர் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அதிமுக கட்சியினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் இணைந்த தலைவர்களாவன, வடிவேல் முன்னாள் எம்எல்ஏ (கரூர்), பி.எஸ்.கந்தசாமி (அரவக்குறிச்சி), வலங்கைமானை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் கோமதி சீனிவாசன், கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த சின்னசாமி, ஆர்.துரைசாமி கோயம்புத்தூரைச் சேர்ந்த போட்டியாளர் துரை (அதிமுக முன்னாள் எம்எல்ஏ), எம்.வி.ரத்தினம் (பொள்ளாச்சி), எஸ்.எம்.வாசன் (வேடசந்தூர்), எஸ்.முத்துகிருஷ்ணன் (கன்னியாகுமரி), புவனகிரியை சேர்ந்த பி.எஸ்.அருள், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆர் ராஜேந்திரன், ஏ பிரபு (கள்ளக்குறிச்சி), தேனியை சேர்ந்த வி.ஆர்.ஜெயராமன், கே பாலசுப்ரமணியன் சீர்காழி, ஏ சந்திரசேகரன் (சோழவந்தான்) மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.ஆர்.தங்கராசு ஆகியோர் ஆவர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக (AIADMK) தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வந்ததில், பா.ஜ., தலைவர் அண்ணாமலை முக்கிய பங்காற்றியதாக, கட்சி வட்டாரங்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.