Prayagraj Accident (Photo Credit: @AnkitSTiwari2 X)

பிப்ரவரி 15, பிரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு, இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அம்மாநிலத்தில் நடைபெறும் திரிவேணி சங்கம் புண்ணிய நதிகள் இணையும் பிரயாக்ராஜ் (Prayagraj) பகுதியில், நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுவது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. Youth Suicide Attempt: ரேஷன் கார்டு வழங்காததால் ஆத்திரம்; வாலிபர் தற்கொலை முயற்சி.. பரபரப்பு சம்பவம்..! 

பேருந்து - வாகனம் மோதி விபத்து:

இதனால் இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஆன்மீக பக்தர்களும் திரளாக கும்பமேளாவில் கலந்து கொள்ளும் நிலையில், தற்போது வரை 49 கோடிக்கு மேலான மக்கள் கும்பமேளாவில் புனித நீராடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து கும்பமேளாவுக்காக உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நோக்கி பயணம் செய்த பிக்கப் வாகனம் ஒன்று, பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. Woman Rape Case: பேருந்தில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை; ஓட்டுநர் உட்பட இருவர் கைது..!

உதவி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்:

பிரயாக்ராஜ் - மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கின்றனர்.