ஏப்ரல் 02, சென்னை (Health Tips): ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன், கடந்த 2022ஆம் ஆண்டில், தாய்லாந்தில் வில்லாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்த விசாரணை அதிர்ச்சியூட்டும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, விறைப்புத்தன்மை குறைபாடு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் காமக்ரா (Kamagra Tablet) என்ற மருந்து மாத்திரை பாட்டிலை அகற்ற உத்தரவிட்டார். இது அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனையில் அவர் இயற்கை மரணம் அடைந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Summer Health Tips: சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க கம்பங்கூழ்.. நன்மைகள் என்னென்ன? கம்பங்கஞ்சி செய்வது எப்படி? அசத்தல் தகவல் இதோ.!
காமக்ரா:
காமக்ரா என்பது ஆண்களில் விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction) சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இதில் வயக்ராவில் காணப்படும் சில்டெனாஃபில் (Sildenafil) என்ற செயலில் உள்ள மூலப்பொருளைக் கொண்டுள்ளது. ஆண்குறியின் விறைப்புத்தன்மையை அதிகரிக்கவும். இந்த மாத்திரைகள் பெரும்பாலும், வாய்வழி ஜெல்லி மற்றும் மெல்லக்கூடிய மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இது பொதுவாக தாய்லாந்து போன்ற நாடுகளில் மருந்தகத்தில் விற்கப்படுகிறது. ஆனால், அமெரிக்க, இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்த அனுமதியில்லை.
காமக்ரா எடுத்துக்கொள்ள சிறந்த நேரம்:
உடலுறவில் ஈடுபடுவதற்கு சுமார் 30 முதல் 60 நிமிடங்கள் முன்னர் எடுத்துக்கொள்ளலாம். வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சிறந்தது. பாதுகாப்பு மற்றும் சரியான முடிவுகளை உறுதி செய்ய, மருந்தளவு மற்றும் நேரம் குறித்து சுகாதார வல்லுநரை நாட வேண்டியது அவசியமாகும்.
பக்க விளைவுகள்:
பொதுவாக தலைவலி, தலைச்சுற்றல், முகம் சிவத்தல், அஜீரணம் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை அடங்கும். அரிதாக, பார்வை மாற்றங்கள், மார்பு வலி, 4 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் விறைப்புத்தன்மை போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
குறிப்பு: இதில் குறிப்பிட்டுள்ள தகவல்களை பின்பற்றுவதற்கு முன்னர், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.