Philippines Earthquake (Photo Credit: @rrichcord X)

ஜூலை 11, மணிலா (World News): ஆசியா மற்றும் இந்தோனேஷியா, ஜப்பான் டெக்டனிக் தட்டுகள் அமையப்பெற்றுள்ள இடத்தில் சமீபகாலமாக நிலநடுக்கங்கள் தொடருகிறது. பசுபிக் வளையம் (Pacific Rim) என அழைக்கப்படும் மிக பிரம்மாண்டமான டெக்டனிக் தட்டு சமீபகாலமாக நிலநடுக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மின்டனோவோ (Mindanao) பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 691 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது. Indian 2 Special Show: இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சுனாமி (Tsunami) எச்சரிக்கை இல்லை:

இதனால் தற்போது வரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. டெக்டனிக் தட்டுகள் மோதிக்கொண்டதன் காரணமாக இந்த பயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேற வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். சுனாமி எச்சரிக்கை ஏதும் தற்போது வரை விடுக்கப்படவில்லை. அதேபோல, இன்று காலை முதலாக ரிக்டர் அளவுகோலில் பல மாறுபட்ட புள்ளிகளுடன் நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

வீதியில் திரண்ட மக்கள்:

நிலநடுக்கத்தின் பதிவு:

டெக்டனிக் தட்டுகள் மோதிக்கொண்டதன் மாதிரி காட்சிகள்: