ஜூலை 11, சென்னை (Cinema News): ஷங்கர் (Director Shankar) இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் (AR Rahman) இசையில், கமல் ஹாசன் (Kamal Hassan), மனிஷா கொரியாலா, ஊர்மிளா, சுகன்யா உட்பட பலர் நடிக்க 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன் (Indian 1996 Tamil Film). ஊழலை எதிர்த்து சுதந்திர போராட்ட வீரர் நடத்திய அதிரடி காட்சிகள் கொண்ட படம், அன்றே ரூ.35 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. படமும் ரூ.25 கோடி செலவில் எடுக்கப்பட்டு இருந்தது.
5 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வருகிறது இந்தியன் 2:
28 ஆண்டுகள் கடந்து இந்தியன் படத்தின் 2ம் (Indian 2 Movie) பாகம் 12 ஜூலை 2024 (நாளை) திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ளார், சுபாஸ்கரனின் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பிரச்சனைகளை நிறைவுபெற்று படம் வெளியாகிறது. Thangalaan Trailer Out: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியீடு.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!
கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ள ரசிகர்கள்:
இதனால் 5 ஆண்டுகளாக இயக்குனர் ஷங்கரின் திரை ரசிகர்கள் மற்றும் இந்தியன் கமலின் ரசிகர்கள் பலரும் படத்தை கொண்டாட தயாராகியுள்ளனர். இன்று இரவு முதலாக உலக நாடுகளில் வெளியாகும் படத்தை கொண்டாட்டதுடன் கண்டுகளிக்க ரசிகர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பல திரையரங்குகளில் முன்பதிவு செய்துகொண்டனர். இப்படம் ரூ.250 கோடி செலவில் தயாராகி இருக்கிறது.
9 மணி சிறப்புக்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி:
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கு சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திரையரங்குகளில் வழக்கமாக காலை முதல் இரவு வரை என 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை 4 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது இந்தியன் 2 திரைப்படத்திற்கு 9 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் வாயிலாக காலை 9 மணி முதல் தமிழ்நாட்டில் இந்தியன் 2 திரைப்படம் திரையரங்கில் வெளியாகும். Dharmapuri: தர்மபுரி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நகராட்சியாக தரம் உயருகிறது அரூர் - தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!
முன்பதிவில் ரூ.16 கோடி வசூல் என தகவல்:
இந்த சிறப்புக்காட்சிக்கு நாளை ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் தமிழ், ஹிந்தி, கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம், ப்ரீ-புக்கிங் எனப்படும் முன்பதிவு முறையில் மட்டும் தற்போது வரை ரூ.16 கோடி வருமானம் பார்த்துள்ளது. ஏற்கனவே சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை என கோடிக்கணக்கில் இலாபம் பார்த்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. வார இறுதியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு மேல் தான் திரைப்படம் திரையிடப்படும். 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
From legendary beginnings to an epic sequel, the journey continues with #Indian2 🇮🇳 Buckle up for the next chapter in Senapathy's saga! 🤞🏻🔥@IndianTheMovie 🇮🇳 Ulaganayagan @ikamalhaasan @shankarshanmugh #Siddharth @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad… pic.twitter.com/uchKMYO85T
— Lyca Productions (@LycaProductions) July 10, 2024