hindu samiyar (Photo Credit: Pixabay)

மே 09, புதுடெல்லி (New Delhi): பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (PM's Economic Advisory Council), மத சிறுபான்மையினரின் பங்கு - ஒரு குறுக்கு நாடு பகுப்பாய்வு (1950-2015) நடத்தியது. தற்போது அதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, " இந்தியாவின் மக்கள்தொகையில் இந்துக்களின் பங்கு 1950 இல் 84% இல் இருந்து 2015 இல் 7.82 சதவீதம் குறைந்துள்ளது (84.68 சதவீதத்திலிருந்து 78.06 சதவீதமாக). அதே நேரத்தில் 1950 இல் 9.84 வீதமாக இருந்த முஸ்லிம் மக்களின் பங்கு 2015 இல் 14.09 வீதமாக அதிகரித்து அவர்களின் பங்கில் 43.15 வீத அதிகரிப்பு காணப்பட்டது. TN Rain Prediction: தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வாளர் தகவல்..!

கிறிஸ்தவ மக்கள்தொகையின் பங்கு 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. சீக்கிய மக்களின் பங்கு 1950 இல் 1.24 சதவீதத்திலிருந்து 2015 இல் 1.85 சதவீதமாக அதிகரித்துள்ளது. அவர்களின் பங்கில் 6.58 சதவீத உயர்வு காணப்பட்டது. பௌத்த மக்கள்தொகையின் பங்கு 1950 இல் 0.05 சதவீதத்திலிருந்து 0.81 சதவீதமாக குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டது. மேலும் இந்தியாவின் மக்கள்தொகையில் ஜெயின்களின் பங்கு 1950 இல் 0.45 சதவீதத்திலிருந்து 2015 இல் 0.36 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் பார்சி மக்கள்தொகையின் பங்கு 85 சதவீத சரிவைக் கண்டுள்ளது. அதாவது 1950 இல் 0.03 சதவீதத்திலிருந்து 2015 இல் 0.004 ஆகக் குறைந்துள்ளது.