ஏப்ரல் 14, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், எடவா (Etawah) மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 28). கணவர் உயிரிழந்த நிலையில், தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர், சிவேந்திர யாதவ் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம், நிலம் வாங்குவதற்காக ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பத்திரப்பதிவு எதுவும் செய்யாமல் 2 மாதங்களுக்கு மேல் தாமதம் செய்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஞ்சலி, பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். படுக்கையில் ஆண் நண்பருடன் இருந்த மனைவி.. அந்தரங்க உறுப்பை அறுத்து களேபரம் செய்த கணவன்.!
கழுத்து நெரித்து கொலை:
இதனையடுத்து, வீட்டுக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அவர் கூறியுள்ளார். அங்கு சென்ற அஞ்சலிக்கு, சிவேந்திர யாதவ் வலுக்கட்டாயமாக மது கொடுத்தார். பின், அவரது நண்பர் கவுரவ் (வயது 19), அஞ்சலியின் கழுத்தை நெரித்துக் (Murder) கொன்றார். அவரது உடலை, தன் தந்தை மற்றும் மனைவிக்கு வீடியோ கால் மூலமாக சிவேந்திர யாதவ் காண்பித்துள்ளார். அதன்பின், அஞ்சலியின் உடலை யமுனை ஆற்றங்கரைக்கு இருவரும் எடுத்துச்சென்று எரித்துள்ளனர். அரைகுறையாக எரிந்த நிலையில், உடலை ஆற்றுக்குள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இருவர் கைது:
இதனிடையே, காணாமல் போன அஞ்சலியை அவரது சகோதரி கிரண் மற்றும் உறவினர்கள் 5 நாட்களாக தேடியுள்ளனர். அவரது இருசக்கர வாகனம், கழிவுநீர் கால்வாய் அருகே எரிந்த நிலையில் கிடந்ததை நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) பார்த்தனர். உடனே, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கும், அஞ்சலிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிவேந்திர யாதவை பிடித்துச் சென்று விசாரித்தபோது, உண்மை தெரியவந்தது. பின், அவரது உடல் யமுனை ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. சிவேந்திரா, கவுரவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அஞ்சலியின் கழுத்தை நெரிக்க பயன்படுத்திய டவல், உடலை யமுனை ஆற்றுக்கு எடுத்துச் சென்ற கார், அஞ்சலியின் எரிந்து போன இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.