Accident File Pic (Photo Credit: @ETVBharatTN X)

ஜனவரி 17, சித்தூர் (Andhra Pradesh News): தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்து, தனியார் பேருந்து ஒன்றை புக் செய்து புறப்பட்டு சென்றனர். திருப்பதியில் தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்த நிலையில், இன்று (ஜனவரி 17) அதிகாலை ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்து லாரி மீது மோதியது (Road Accident Near Chittoor). Harassment Over Skin Color: படிக்கும் வயதில் திருமணம்.. நிறத்தை காண்பித்து சித்ரவதை., 19 வயது கல்லூரி மாணவி விபரீதம்.!

தமிழர்கள் உயிரிழப்பு:

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் தனியார் பேருந்திலிருந்த 4 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த நபர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.