Cop Beats Youth in Coimbatore (Photo Credit: @News18Tamilnadu X)

ஜனவரி 13, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையில் பணியாற்றி வரும் மோகன் ராஜ் என்ற காவலர், சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்று இருக்கிறார். அப்போது, இளைஞர் ஒருவர் சாலையை செல்போன் பார்த்தபடி, அலட்சியமாக கடந்து இருக்கிறார். இதனால் காவலர் வாகனத்தில் நிலைதடுமாறி விழ நேர்ந்த நிலையில், ஒருகணம் அவர் வாகனத்தை சுதாரித்து கட்டுக்குள் கொண்டு வந்தார். மேலும், அலட்சியமாக சாலையை கடந்த நபருக்கு கன்னத்திலே பளார் என அறைவிட்டார். இந்த விஷயம் குறித்து காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. Chennai Shocker: மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து பயங்கரம்.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.! 

நெட்டிசன்கள் இருவேறு கருத்து:

இந்த விடியோவை பார்க்கும் பலரும் தங்களின் கண்டனத்தை காவலருக்கு எதிராக தெரிவித்து வரும் அதே வேளையில், இளைஞரின் அலட்சியமான செயலால் சாலையில் பயணிக்கும் நபர் வாகன விபத்தில் சிக்கினால் சரியா? அதனை தடுத்து விபத்தை தவிர்த்த ஆவேசத்தில் காவலர் செயல்பட்டு இருக்கிறார். எனினும், அதனை வாதமாக அவர் அறிவுறுத்தி இருக்க வேண்டும். அறைந்தது தவறு எனவும் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். சட்டப்படி தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்ற நிலையில், விதியை மீறிய காவலர், விதிகளை மதிக்காத இளைஞரை கண்டிப்பதாகவும் குவிக்கப்படுகிறது.

காவலரின் அதிர்ச்சி செயலின் பதறவைக்கும் காட்சிகள்:

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.