ஜனவரி 17, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூரு (Bengaluru) ஹெச்.ஏ.எல். பகுதியில் வசித்தவர் சுஹாசி சிங் (வயது 24). இவர், மாரத்தஹள்ளியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி 12ஆம் தேதி ஹெச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த உறவினர் பிரவீன் சிங் (வயது 28) என்பவரை சந்திக்க சென்றார். அப்போது, திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய சுஹாசியை, அவரது உறவினர் மீட்டு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். Harassment Over Skin Color: படிக்கும் வயதில் திருமணம்.. நிறத்தை காண்பித்து சித்ரவதை., 19 வயது கல்லூரி மாணவி விபரீதம்.!
பெண் தீக்குளிப்பு:
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (ஜனவரி 16) காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பரபரப்பு தகவல் வெளியானது. இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர். அடிக்கடி வெளியில் சுற்றுலா சென்று வந்துள்ளனர். அப்போது, இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதை, பிரவீன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி அடிக்கடி தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில், வீடியோவை உனது பெற்றோருக்கு அனுப்புவேன். என்று மிரட்டி வந்துள்ளார்.
பெண் தற்கொலை:
இதனிடையே சுஹாசி, வேறு ஒரு வாலிபருடன், 'டேட்டிங்' செய்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த பிரவீன் மிகவும் கோபம் அடைந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி சுஹாசிக்கு போன் செய்து ஹோட்டலுக்கு வரவழைத்தார். பிரவீன் தொந்தரவு கொடுத்ததால் மனம் உடைந்த சுஹாசி, தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை (Suicide) செய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, பிரவீன் நேற்று (ஜனவரி 16) கைது செய்யப்பட்டார்.