Thala Kari Kuzhambu (Photo Credit: YouTube)

ஜனவரி 15, சென்னை (Kitchen Tips): ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், பண்டிகை காலத்திலும், அதன் தொடக்கத்தில் சைவ உணவுகளுக்கு அளிக்கப்படும் மதிப்புகளைப்போல, அசைவ விரும்பிகள் தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை ருசித்து சாப்பிடுவது இயல்பானது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் நிறைவில் பலரும் ஆடு, மீன், சிக்கன் என தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். அந்த வகையில், மணமணக்கும் வகையில் ஆட்டு தல குழம்பை (Thala Kari Kuzhambu) எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். Mutton Biryani Recipe: வீட்டில் சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

தல கறி

தேங்காய் - 1/2மூடி

மிளகாய் - 5

பட்டை, கிராம்பு - 2 ஸ்பூன்

கொத்து மல்லி - 1/4 கப்

சின்ன வெங்காயம் - 15

மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்

சமையல் எண்ணெய் - 3 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

இஞ்சி - 1/2 தூண்டு

தக்காளி - 1

பூண்டு - 10 பள்ளு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி அனைத்தும் நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும் அரிசி, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, வரமிளகாய் அனைத்தும் வதக்கவும். தேங்காய் வைத்து வதக்கிய அனைத்தையும் அரைத்து எடுக்கவும்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொறித்ததும், கறிவேப்பிலை போட்டு, கறியை போட்டு நன்கு வதக்கவும். பின் உப்பு போட்டு கறி மசாலா, மட்டன் மசாலா போட்டு, அரைத்து வைத்த கலவையை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் இறக்கவும். அவ்வளவு தான், ஹோட்டல் முறை தலை கறி குழம்பு ரெடி.