ஜனவரி 16, சென்னை (Chennai News): தமிழர்களின் தைத்திருநாள் பண்டிகை 13 ஜனவரி 2025 முதல் கொண்டாட்டங்களுடன் தொடங்கி இருக்கிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என பழைய கசப்பான எண்ணங்களை தீயில் இட்டுகொளுத்தி பொங்கலை வரவேற்ற தமிழர்கள், கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தைப்பொங்கலையும் (Pongal 2025), உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசு, காளைகளுக்கு நன்றி செலுத்த மாட்டுப்பொங்கலையும் (Mattu Pongal 2025) வைத்து சிறப்பித்தனர். பயபக்தியுடன் வழிபாடுகளும் பல முக்கிய திருத்தலங்களில் நடைபெற்றது. Kaanum Pongal: "காளையர்கள் கன்னியரை வட்டமிட.. காணாத பெரிவர்கள் கும்மாளமிட.." உங்களுக்கான இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள் இதோ.!
காணும் பொங்கல் (Kaanum Pongal) @ கன்னிப்பொங்கல் (Kanni Pongal 2025):
அதனைத்தொடர்ந்து, 16 ஜனவரி 2025 இன்று காணும் பொங்கல் என்ற கன்னிப்பொங்கல் சிறப்பிக்கப்படவுள்ளது. கதிரவனுக்கும், பசு-மாட்டுக்கும் நன்றி தெரிவித்து கொண்டாடிய பொங்கலை தொடர்ந்து, உற்றார்-உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கசப்புகளை மறந்து புதிய எண்ணத்துடன் அவர்களிடம் உரையாடி நட்பு பாராட்டி மகிழ்வது, பெரியோர்களிடம் ஆசி வாங்குவதற்காக காணும் பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் திருமணம் ஆகாத பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தால், நல்ல வரன் கைகூடும் என்பது ஐதீகம். Pongal 2025: தித்திக்கும் தைப்பொங்கல், களைகட்டும் மாட்டுப்பொங்கல், பாசத்துடன் காணும் பொங்கல்... வாழ்த்துச் செய்தி இதோ..!
காணும் பொங்கலை உங்களின் நண்பர்களுடன் கொண்டாட, எமது லேட்டஸ்ட்லி (LatestLY Tamil) நிர்வாகமும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறது. இத்துடன் உங்களுக்காக சில வாழ்த்துச்செய்திகளும் தரப்பட்டுள்ளன. அதனை நீங்கள் வாட்சப், முகநூல் போன்றவற்றில் ஸ்டேட்டஸாக வைத்து, உங்களின் வாழ்த்துக்களையும் பகிரலாம்.
1. நண்பர்கள் உறவினர்களை சந்தித்து மகிழும் காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
2. பண்டிகையில் உறவினரை காண சிறப்பிக்கப்படும் காணும் பொங்கல் இன்று!
3. அனைவருக்கும் இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
4. உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினருக்கும் இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
5. காணும் பொங்கலை கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
6. சொந்த-பந்தங்களை சந்தித்து கொண்டாடும் இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்!