INDW Vs IREW 2025 | Team India Victory (Photo Credit: @BCCI X)

ஜனவரி 16, ராஜ்கோட் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணி, இந்திய ஆடவர் பெண்கள் (IND Vs IRE) கிரிக்கெட் அணியுடன் ஒரு நாள் போட்டிகளில் மோதியது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.

அடித்து நொறுக்கிய இந்திய பெண் சிங்கங்கள்:

மூன்றாவதாக ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடியவர்களில் பிரதிகா ராவல் 129 பந்துகளில் 154 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 80 பந்துகளில் 135 ரன்கள் விளாசி இருந்தார். ரிச்சா கோஸ் 42 பந்துகளில் 59 ரன்களை எடுத்திருந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 435 ரன்கள் குவித்து இருந்தது. INDW Vs IREW: இந்தியா - அயர்லாந்து மகளிர் 3வது ஒருநாள் போட்டி; நேரலையில் பார்ப்பது எப்படி? 

அயர்லாந்து அணி படுதோல்வி:

அதனைத் தொடர்ந்து, மறுமுனையில் களமிறங்கிய அயர்லாந்து அணியின் ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறியதால், 31.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தனர். இதன் வாயிலாக இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டியில் சுமார் 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த ஆட்டம் ராஜ்கோட் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

அயர்லாந்த்து பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (INDW Vs IREW) இந்திய அணி கைப்பற்றியதைத்தொடர்ந்து, வெற்றிக்கோப்பையை இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கையில் ஏந்தினார்.

வெற்றிக்கோப்பையை ஏந்திய மகிழ்ச்சியில் ஸ்ம்ரிதி மந்தனா: