Alanganallur Jallikattu (Photo Credit: YouTube)

ஜனவரி 16, சென்னை (Chennai News): தமிழர்களின் தைத்திருநாள் பண்டிகை 13 ஜனவரி 2025 முதல் கொண்டாட்டங்களுடன் தொடங்கி இருக்கிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என பழைய கசப்பான எண்ணங்களை தீயில் இட்டுகொளுத்தி பொங்கலை வரவேற்ற தமிழர்கள், கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தைப்பொங்கலையும் (Pongal 2025), உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசு, காளைகளுக்கு நன்றி செலுத்த மாட்டுப்பொங்கலையும் (Mattu Pongal 2025) வைத்து சிறப்பித்தனர். பயபக்தியுடன் வழிபாடுகளும் பல முக்கிய திருத்தலங்களில் நடைபெற்றது. பொங்கல் விளையாட்டு போட்டிகளுடன், பல இடங்களில் ஜல்லிக்கட்டு களைகட்டியது. Palamedu Jallikattu 2025: பட்டைய கிளப்பிய பாலமேடு ஜல்லிக்கட்டு.. முதல் 3 இடங்களைப் பிடித்த வீரர்கள் லிஸ்ட் இதோ.! https://tamil.latestly.com/tamil-nadu/the-world-famous-jallikattu-competition-was-held-at-madurai-palamedu-23639.html

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025 (Alanganallur Jallikattu 2025):

அவனியாபுரம், பாலமேடு பகுதிகளைத் தொடர்ந்து 16 ஜனவரி 2025 இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தருவார்கள். இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு இருக்கிறது. சுமார் 2400 க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலையில் 7 மணிமுதல் தொடங்கி நடைபெறுகிறது. போட்டிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். காளையை அடக்கும் வீரருக்கும் மோதிரம், தங்க நாணயம், சிறந்த வீரராக தேர்வு செய்யப்படும் நபருக்கு கார், காளை உரிமையாளருக்கு டிராக்டர், போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தங்க நாணயங்கள் ஆகியவை பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை (Alanganallur Jallikattu Live) இணைப்பு 1:

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை இணைப்பு 2: