
ஜனவரி 15, சென்னை (Kitchen Tips): பிரியாணி என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம். அந்தவகையில், அதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் சிக்கன் பிரியாணி. பலருக்கு இந்த பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியாது. இந்த ரெசிபியை பொறுமையுடன் செய்தால், சுவை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட சிக்கன் பிரியாணியை (Chicken Biryani) சுவையாக எப்படி செய்வதென்று இப்பதிவில் காண்போம். Chicken Fry Recipe: வீட்டிலேயே சுவையான சிக்கன் ப்ரை செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - முக்கால் கிலோ
பாசுமதி அரிசி - 4 கப்
வெங்காயம், தக்காளி - தலா 3 (நறுக்கியது)
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - கால் கட்டு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
தயிர் - கால் கப்
வறுத்த முந்திரி - 20
தண்ணீர் - 4 கப்
பிரியாணி இலை - 2
எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 10
இஞ்சி - 2 இன்ச் துண்டு
பூண்டு - 8 பல்
பட்டை - 2 இன்ச்
கிராம்பு - 6
ஏலக்காய் - 3
தண்ணீர் - 1 தேக்கரண்டி. Mutton Biryani Recipe: வீட்டில் சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அதில், அரைத்து வைத்துள்ள பேஸ்ட், புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு 2 கப் தேங்காய் பாலுடன், 4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு பாசுமதி அரிசியை நீன்கு கழுவி, தேங்காய் பாலில் போட்டு, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின், அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
- அதில் தக்காளி, தயிர், மிளகாய் தூள் மற்றும் மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும். பின் குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, தீயை குறைத்து, 10 நிமிடம் சிக்கனை வேக வைக்கவும்.
- அடுத்து குக்கரில் அரிசி ஊற வைத்துள்ள தேங்காய் பாலை வடிகட்டி ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும். பின், அதில் அரிசியை சேர்த்து, நீரானது ஓரளவு வற்ற ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து குக்கரை மூடி, 10 நிமிடம் கழித்து இறக்கி, கொத்தமல்லி மற்றும் முந்திரியைத் தூவினால், சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.