ஜனவரி 14, சென்னை (Chennai News): 2025ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை, 14 ஜனவரி 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. உலகளவில் வாழ்ந்து வரும் தமிழர்கள், இன்று பாரம்பரிய முறைப்படி தங்களின் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கோவில்களிலும், ஒவ்வொரு வீடுகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை சூரியப்பொங்கல் வைத்தும் வழிபாடு செய்து, மக்கள் உழவுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கு நன்றிகளை தெரிவித்தனர். இந்நிலையில், பாரம்பரிய முறைப்படி மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கோவில்களில், மண்பானை மற்றும் விறகு அடுப்பில், பாரம்பரியபடி சர்க்கரை பொங்கல் வைத்து, பொங்கல் 2025 பண்டிகையை சிறப்பித்தனர். Pongal 2025 Celebration Video: களைகட்டும் பொங்கல் பண்டிகை 2025: சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு.! 

சர்க்கரை பொங்கல் வைத்து பண்டிகை சிறப்பிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)