ஜனவர் 14, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், விராட் கோலியின் ஒன் 8 கம்யூனில் (One8 Commune) உள்ள ஒரு விலையுயர்ந்த உணவு குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். மாணவி சினேகா, ஒன்8 கம்யூனில் "பூட்டா" என்ற கார்ன் கோப் சில துண்டுகளுக்கு ரூ. 525 ரூபாய் செலுத்தியாக தெரிவித்துள்ளார். சினேகாவைப் போலவே, பல வாடிக்கையாளர்கள் விலையைப் பார்த்ததும் திகைத்துப் போனார்கள். அவரது எக்ஸ் தள பதிவு இணையத்தில் வெளிவந்த பிறகு, சிலர் அந்த பொருளுக்கு அதிகமாக செலவழித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், ஆடம்பரமான உணவகங்கள் உணவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சேவைக்கும் கட்டணம் வசூலிக்கின்றன என்று தெளிவுபடுத்தினர். Electrocution Death: கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மகள்; உடல் சாம்பலாகி கணவர் கொடூர தற்கொலை.!
ஒன்8 கம்யூன்:
ஒன்8 கம்யூன், கடந்த 2022-யில் விராட் கோலி (Virat Kohli) மற்றும் அவரது நண்பர் வர்த்திக் திஹாரா ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது. அவர்களின் விற்பனை நிலையங்கள் டெல்லி, புனே, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ளன. "ஒன்8" என்ற வார்த்தை கோஹ்லியின் ஜெர்சி எண் 18-லிருந்து பெறப்பட்டது, "கம்யூன்" என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அர்த்தத்தை குறிக்கிறது.
வைரல் பதிவு இதோ:
paid rs.525 for this today at one8 commune 😭 pic.twitter.com/EpDaVEIzln
— Sneha (@itspsneha) January 11, 2025