EFPO (Photo Credit: epfindia.gov.in Website)

ஜனவரி 16, புதுடெல்லி (New Delhi): மத்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, இபிஎப்ஓ பெரும் நபர்கள், தங்களின் யுஏஎண் கணக்கு, ஆதார் ஆகியவற்றை வங்கிக்கணக்குடன் இணைக்க 15 ஜனவரி 2025 இன்று இறுதி நாளாக அறிவித்து இருந்தது. இதற்குள் இபிஎப்ஓ உறுப்பினர்கள் ஆதாரை இணைக்க மறுத்தால், வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) பலன்களை பெற இயலாது எனவும் அறிவிக்கப்பட்டது. Thiruvalluvar Dhinam: "நம் மண்ணின் தலைசிறந்த தத்துவஞானிகள்" - திருவள்ளுவர் தினம் 2025: நினைவுகூர்ந்த பிரதமர் மோடி.! 

பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு முக்கியம்:

இந்தியாவில் வேலைவாப்புக்கான விஷயத்தில் கவனம் செலுத்தி, வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்களை கண்காணிக்கும் திட்டத்தின் கீழ், வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2024 - 2025 பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், பயனாளர்கள் ஆதார் மூலமாக ஊக்கத்தொகை திட்டத்தில் இணைப்புகளை பெற, பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு முக்கியம் என அறிவிக்கப்பட்டது.

ஆதார் - வங்கிக்கணக்கு இணை:

EPFO https://www.epfindia.gov.in/site_en/index.php பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் UAN-ஐ செயல்படுத்தி, இணைப்பை திறக்கவும்.

UAN , ஆதார் நம்பர், பெயர், பிறந்த தேதி, ஆதார் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் நம்பரை பதிவு செய்யவும்.

அதில் இபிஎப்ஓ சேவையில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை உறுதி செய்ய ஓடிபி முறையை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா?