Jallikattu Bulls (Photo Credit: Instagram)

ஜனவரி 15, பாலமேடு (Madurai News): தைப்பொங்கல் 2025 பண்டிகை நேற்று முதல் சிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அளவில் 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் அறுவடை திருநாளாகவும், உழவுக்கும்-மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் கதிரவனை போற்றி கொண்டாடப்படும் சூரியப்பொங்கல் எனப்படும் தைப்பொங்கல் பண்டிகை நேற்று வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று மாட்டுப்பொங்கல் 2025 பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Avaniyapuram Jallikattu):

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Avaniyapuram Jallikattu) நேற்று மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில், ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் கார்த்திக் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். குன்னத்தூர் அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், 13 காளைகளை அடக்கி திப்புவனம் முரளிதரன் 3ஆம் இடத்தையும் பிடித்தனர். சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை உரிமையாளரான பொன்னமவராதியை சேர்ந்த மலையாண்டி பெற்று சென்றார். முதல் பரிசு பெற்ற கார்த்திக்கு கார் வழங்கப்பட்டது. Kaanum Pongal in Chennai: சென்னை மக்களே ரெடியா? காணும் பொங்கல் 2025; மெரினா செல்வோர் கவனத்திற்கு..! விபரம் உள்ளே.!

பாலமேடு ஜல்லிக்கட்டு (Palamedu Jallikattu 2025):

இன்று மதுரை பாலமேட்டில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்தார். பொதும்பு பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்துள்ளார். மலையாண்டி என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக மலையாண்டிக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. ஜி.ஆர்.கார்த்தி என்பவரின் காளைக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.