ஜனவரி 14, திருமலை (Sports News): இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அங்கு ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையில், பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் (Border Gavaskar Trophy) போட்டியில் விளையாடிய இந்திய அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி அடைந்தது. 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்து, பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024-2025 ஐ தனதாக்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பில் விளையாடிய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar), 4 வது டெஸ்ட் தொடரில் அசத்தல் பங்களிப்பை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இதனால் அவர் இந்திய ரசிகர்களின் கவனத்தையும் பெற்று இருந்தார். Anand Mahindra: உலகத்தமிழர்களுக்கு, தமிழில் பொங்கல் 2025 வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மகேந்திரா.!
திருப்பதியில் நிதிஷ் குமார் ரெட்டி(Nitish Kumar Reddy Tirupati):
அதனைத்தொடர்ந்து, தியாகம் திரும்பிய நிதிஷ் குமார் ரெட்டி, தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக திருப்பதி ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, திருப்பதி (Tirupati Temple) கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு அலிபிரி நடைபாதை வழியாக பிரார்த்தனையை தொடங்கியவர், முட்டிங்காலிட்டு மலைப்பாதையில் ஏறத் தொடங்கினார். இதுதொடர்பான காணொளி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
முழங்காலிட்டபடி மலையேற வேண்டுதலை நிறைவேற்றும் முயற்சியில் நிதிஷ் குமார் ரெட்டி:
Nitish Kumar Reddy taking blessings at Tirupati after Border Gavaskar Trophy 🤍 pic.twitter.com/PYaQFlXrZP
— Johns. (@CricCrazyJohns) January 13, 2025